IND vs AUS 4th t20 Match 2025 Highlights India Won By 48 Runs Australia
IND vs AUS 4th t20 Match 2025 Highlights India Won By 48 Runs AustraliaICC

இந்தியாவின் அபார வெற்றி- தடுமாற்றத்தில் ஆஸ்திரேலிய அணி!

India vs Australia 4th t20 Match 2025 Highlights : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றியை பதிவு செய்தது.
Published on

ஆஸ்திரேலியா இந்தியா மோதல்

India vs Australia 4th t20 Match 2025 Highlights : ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆடவர் அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் இருந்தது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது.

167 ரன்கள் இலக்கு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்ஷர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சொற்ப ரன்களில் வெளியேறிய ஆஸ்திரேலிய ஓபனர்ஸ்

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் இலக்குடன் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நன்கு துவக்கம் தந்தனர்.பின்னர், துபேவின் பந்து வீச்சில் மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து,அக்ஷர் பட்டேல் பந்தில் மேத்தீவ் சாரட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னிலையில் இந்திய

இந்நிலையில், அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தாக்கு பிடிக்கமுடியாமல் ஆட்டமிழந்தனர். அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய மகளிர் அணி

பிசிசிஐ உலககோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் அணி, அவரின் கைகளால் உணவு சாப்பிட்டு, அவருடன் சில நகைப்பு உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளனர். இச்சமயத்தில், இந்திய ஆடவர் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று முன்னிலை வகித்துள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in