

கிரிக்கெட் பட்டியல்
Rohit Sharma ICC ODI Ranking : சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதில் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என பல்வேறு போட்டிகளில் பல நாடுகள் மோதி விளையாடி வருகிறது. பொதுவாக கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சியை சிறந்த பவுலர்கள், ஃபீல்டர்கள், பேட்டர்கள் என சில பட்டியலை வெளியிடும். அதன்படி, தற்போது ஐ.சி.சியை ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியல்
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை(ICC ODI Ranking for Batting) இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார். இதனால் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் ரோஹித்
அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ரோஹித் ஹிஸ்டரி
ரோஹித் சாதனைகளை பார்க்கும்பொழுது, வேடிக்கைக்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மேலும், முதல் 15 ஐபிஎல் போட்டிகளில் ஆறு ஐபிஎல்களை வென்றார், 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் ஐந்து சதங்கள் அடித்தார், இறுதியாக 2019 இல் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கியபோது, தனது முதல் தொடரில் மூன்று விரைவான சதங்கள், அவற்றில் ஒன்று இரட்டை சதங்களை அடித்துள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவிற்கு மேலும் ஒரு சாதனையாக ஐ.சி.சியை ஒரு நாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டதில் முதலிடத்தை பிடித்துள்ளார். 3 வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ள ரோஹித் சர்மா சாதனையை(Rohit Sharma ICC ODI Ranking in Batting), அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.