

கிரிக்கெட் தொடர் ஆட்டம் :
Shreyas Iyer Health Update in Tamil : கிரிக்கெட் என்றால் உலக முழுவதும் ரசிர்கள் அதிகம். அதிலும் தன்னுடைய ஹீரோ ஆட்டக்காரர்கள் களத்தில் இருந்தால், அவர்களது கண்கள் 11 பேரில் அந்த ஒருவரை மற்றும் உற்று நோக்கும். இதில், குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம், அப்படி இருக்கையில் தனது ஹீரோவான ஆட்டக்காரர் களத்தில் இருப்பதை எப்படி ரசிக்கிறார்களோ அதைப்போல், அவர்கள் களத்தில் காயமடைந்தாலும் அவர்களது வருத்தம், நேரில் உச்சுக்கொட்டும் வாயில் இருந்து தங்களது சமூக வலைதள சோகம் வரை தொடர்ந்து இருக்கும். இந்நிலையில், கிரிக்கெட் போட்டியானது ஒவ்வொரு ரகமாகவும், பிரிவாகம் நடக்கும். அதாவது, ஒரு நாள் போட்டி, ஐபிஎல் போட்டி, டெஸ்ட் போட்டி என இருக்கும்.
ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்(Shreyas Iyer Injury Update) இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் முன்னரே3-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை அடுத்து, பிறகு சாதராண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் எக்ஸ் பதிவு
பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது உட்நிலை குறித்த அப்டேட்டை ஸ்ரேயாஸ் ஐயரே(Shreyas Iyer Health Update in Tamil) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுளளார்.