

விராட் கோலியின் 4 புதிய சாதனைகள்
Virat Kohli Centuries Record Against New Zealand : இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனியாளாகப் போராடி சதம் அடித்தார். 108 பந்துகளை எதிர்கொண்ட அவர் 124 ரன்கள் விளாசினார். அவர் களத்தில் இருந்தவரை இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,மற்ற வீரர்கள் கை கொடுக்காததால், இந்தியா தோல்வியைத் தழுவியது. இருப்பினும் கோலி 4 மெகா சாதனைகளைப் படைத்துள்ளார் அதிரடி காட்டியுள்ளதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோல்வியை தாண்டி மறக்கமுடியாத கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் 6 சதங்கள் அடித்திருந்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார். சச்சின், ஜெயசூர்யா (5) ஆகியோரை முன்பே கடந்திருந்தார்.
ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த சாதனையில், நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்களுடன் கோலி முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் 7 சதங்கள் அடித்துள்ளார். இலங்கை (10), வெஸ்ட் இண்டீஸ் (9), ஆஸ்திரேலியா (8) அணிகளுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
மூன்று வடிவங்களிலும் கிவீஸுக்கு முன்னால் அதிக ரன்கள் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் ஆனார் கோலி. அவர் 3153* ரன்கள் எடுத்து ரிக்கி பாண்டிங்கை முந்தினார். சச்சின் டெண்டுல்கர் 3345 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 3வது இடத்தில் அதிக ரன்கள் 3ம் இடத்தில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.
அவர் 12,666 ரன்கள் எடுத்து, 12,662 ரன்கள் எடுத்திருந்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார். குமார் சங்கக்காரா 9747 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார், விராட் கோலியின் தொடர் சாதனைகளை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.