ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை- டாஃப்பில் ரோஹித் சர்மா, கோலி!

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.
ODI Cricket Rankings - Rohit Sharma, Kohli in TOPF!
ODI Cricket Rankings - Rohit Sharma, Kohli in TOPF!google
1 min read

தென்னாப்பிரிக்காவை வென்ற இந்தியா

icc oneday cricket batters list டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் பங்கேற்ற ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம்

இந்த இரு தொடர்களில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, விராட் கோலி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் உள்பட 302 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

அதில், பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் ஷர்மா முதலிடத்திலும் கோலி இரு இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் கில் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல, அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2027ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியும், இந்திய வீரர்களும் பார்மில் இருந்து, கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா, கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள பேட்டர்கள் பட்டியிலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள ரோஹித் சர்மா, கோலி இருவரும் மற்ற போட்டிகளில் வெளியில் சென்றாலும் தங்களது சீனியாரிட்டியை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிரூபித்து, பட்டியலில் டாப்பில் உள்ளனர். ஐசிசி இந்த பட்டியலை வெளியிட்டதற்கு பிறகு ரோஹித், கோலி ரசிகர்கள் இதனை ஷேர் செய்து, வாழத்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in