ரூ.710 கோடி சம்பளத்துடன் புதிய சாதனை : உலக நட்சத்திரத்தை கட்டிப் போட்ட பார்சிலோனா...

நட்சத்திர வீரரை அணியில் தக்கவைக்கும் நோக்கில், ரூ.710 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
New Record with a ₹710-Crore Salary: Barcelona Secures Global Superstar with Mega Deal
New Record with a ₹710-Crore Salary: Barcelona Secures Global Superstar with Mega DealAi Generated
1 min read

உலககோப்பை வென்ற கேப்டனுக்கு பரிசு:

பார்சிலோனா: உலகக்கோப்பையை ஸ்பெயினுக்கு வென்று கொடுத்த கேப்டன் ரோட்ரி, மான்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து வெளியேறி பார்சிலோனா அணியில் இணைய உள்ளார்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் நட்சத்திர வீரர்கள் பட்டாளம் ஏதும் இன்றியே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

ரோட்ரியை தக்கவைக்க பார்சிலோனா பிரம்மாண்ட ஒப்பந்தம்

இதையடுத்து உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்த ஸ்பெயின் அணியின் வீரர்களில் கேப்டனான ரோட்ரியும் ஒருவர். கடந்த 2019ம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியில் இணைந்த ரோட்ரி, அந்த அணிக்காக 7 சீசன்களில் 298 போட்டிகளில் விளையாடி 12 முக்கிய பட்டங்களை வென்றுள்ளார். 

இதில் 4 பிரீமியர் லீக் பட்டங்கள் மற்றும் 1 சாம்பியன் லீக் பட்டமும் அடங்கும். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் ரோட்ரியின் அந்தஸ்து அதிகரித்துள்ளது. இதனால் அவரை தங்களது அணியில் இணைக்க பல கிளப்கள் போட்டிபோட்டன .

கேப்டன் ரோட்டரி விருப்பம் தெரிவித்திருக்கிறார்:

இதில் பார்சிலோனா கிளப்பில் இணைய அவர் சம்மதித்துள்ளார். இதுதொடர்பாக மான்செஸ்டர் சிட்டி மற்றும் பார்சிலோனா கிளப்புகளுக்கு இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ரோட்ரியை பார்சிலோனாவுக்கு விற்க மான்செஸ்டர் சிட்டி ரூ.710 கோடி தொகைக்கு சம்மதித்துள்ளது. 

பார்சிலோனாவுடன் அவர் 4 ஆண்டு ஒப்பந்தத்தில் இணைய உள்ளார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர் இணைவார் என தெரிகிறது. இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஒப்பந்தம் :

ரோட்ரியை தக்கவைக்கும் பார்சிலோனாவின் இந்த நடவடிக்கை, அணியின் எதிர்கால திட்டங்களில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

உலக கால்பந்து அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம், வரும் நாட்களில் மேலும் பல விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in