
பாகிஸ்தான் புள்ளி விவரம்
Indian players celebrate Sindhu's victory on the pitch - Modi is proud! துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், வருண் சக்ரவர்த்தி, அக்சர், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியாவின் மாபெரும் வெற்றி
பின்னர் , வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 5 ரன்களிலும் ஷுப்மன் கில் 12 ரன்களுடனும் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் துவண்ட இந்திய அணியை தூக்கி நிறுத்தும் விதமாக, அதிரடியாக விளையாடிய திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
கொண்டாட்டத்தில் இந்திய மக்கள்
பாகிஸ்தான் அமைச்சர் வழங்க இருந்த கோப்பையை மறுத்து, இந்திய வீரர்கள் கொண்டாடியதை அடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 21 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இந்திய அணி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதகாவும் அவர் கூறியதை அடுத்து, இந்திய அணியின் இந்த மாபெரும் கொண்டாட்டத்தை இந்திய மக்கள் அனைவரும் தங்கள் இடங்களில் வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இதற்கு இந்திய பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதளத்தில் விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுள்ளது எனவும் ஆசிய கிரிக்கெட் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை பலரும் ரீ- டூவிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.