

சாதனை பட்டியில் முதலிடத்தில் சூர்யவன்ஷி
Vaibhav Suryavanshi SMAT Century Record : முன்னதாக விஜய் சோல் என்ற வீரர் தனது 18 வயதில் சதம் அடித்திருந்த நிலையில் தற்போது வைபவ் சூர்யவன்ஷி 14 வயதிலேயே சதம் அடித்து இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய பீகார் அணியில் தொடக்க வீரர் விபின் சௌரப் நான்கு ரன்களிலும், பியூஷ் சிங் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
எனினும் மறுமுனையில் முதலில் பொறுப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி பின்னர் அதிரடி காட்டினார்.
அதிக சிக்ஸர் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
ஏழு பவுண்டரி, ஏழு சிக்ஸர் என பறக்க விட்ட அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 177 என்ற அளவில் இருந்தது. கடைசி வரை அவர் ஆட்டம் இழக்காமல் நின்றார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பீகார் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்தது.
களமிறங்கிய மகாராஷ்டிரா அணி
ஆகாஷ்ராஜ் 26 ரன்களும், ஆயுஷ் 25 ரன்களும் எடுக்க பீகார் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. முன்னாள் சிஎஸ்கே வீரர் ராஜவர்தன் ஹங்கேர்க்கர் நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கொடுத்து 35 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மகாராஷ்டிரா அணி களம் இறங்கியது.
வெற்றி பெற்ற மகாராஷ்டிரா அணி
கேப்டனாக விளையாட பிரித்வி ஷா அதிரடியை காட்டினார். 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 பந்துகளில் அவர் 66 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று நிராஜ் 30 ரன்களும், ரஞ்சித் நிக்காம் 27 ரன்களும், நிக்கில் நாயக் 22 ரன்களும் எடுக்க 19 புள்ளி ஒரு ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து மகாராஷ்டிரா அணி 182 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.
பிரித்வி ஷாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்திற்கு, பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.