வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி : குவியும் பாராட்டு!

Vaibhav Suryavanshi India U19 Records in Tamil : 14 வயதே ஆகும் இந்திய கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி U19 அணியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
Vaibhav Suryavanshi, who is captaining the team in the Under-19 category, is receiving a lot of praise.
Vaibhav Suryavanshi, who is captaining the team in the Under-19 category, is receiving a lot of praise.Google
2 min read

வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டுக்கள்

Vaibhav Suryavanshi India U19 Records in Tamil : ஐபிஎல் 2025இல் சிறப்பாக செயல்பட்ட வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய U19 அணியிலும் இடம்பிடித்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டிகளில் வைபவின் ஆட்டம் இந்திய அணிக்கு வெகுவாக கைகொடுத்தது.

சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம்

மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அதிரடியான ஆட்டத்தால் தினம் ஒரு சாதனையை படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

கேப்டனாக களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி

இந்தநிலையில் தான் தற்போது இந்திய U19 அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மத்ரே மற்றும் துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா இருவரும் காயம் காரணமாக பங்கேற்க முடியாததால், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டார்.

14 வயதில் இந்திய U19 கேப்டன்

வழக்கமாக தனது அதிரடி பேட்டிங் மூலமாக சாதனை படைத்து வந்த வைபவ் சூர்யவன்ஷி தற்பொது இதன் தொடர்ச்சியாக கேப்டனாகவும் சாதனை படைத்திருக்கிறார்.

அதாவது U19 எனப்படும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனையை தான் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

வரலாற்றில் முதல் வீரராக 14 ஆண்டுகள் 282 நாட்கள் வயதே ஆன வைபவ் ஒரு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.

சூர்யவன்ஷியின் அடுத்ததொரு சாதனை

இதற்கு முன்பு பாகிஸ்தானின் அகமது ஷெஹ்சாத் 15 ஆண்டுகள், 141 நாட்கள் வயதில் தேசிய அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு 2007-ல் பாகிஸ்தான் U19 அணியை அவர் வழிநடத்தினார். 19 ஆண்டுகால இந்த சாதனையை முறியடித்து உலகின் முதல் வீரராக 14 வயதில் இந்திய அணியின் கேப்டனாகி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

U19-ல் கேப்டனாகிய 5 இந்திய வீரர்கள்

கிரிக்கெட்டில் ஐந்து வீரர்கள் மட்டுமே 16 வயதுக்கு முன் தங்கள் தேசிய அணியை வழிநடத்தி உள்ளனர். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் அபிஷேக் சர்மா 16 வயது 105 நாட்களில் U19 இந்திய அணிக்கு தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது.

அதேபோல், ஸ்ரீவஸ்தவா, ஆர்யன் ஜூரெல் மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய வீரர்கள் 17 வயதை அடைவதற்கு முன்பு இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கியுள்ளனர்.

வைபவ் சூர்யவன்ஷிக்கென உருவாகும் ரசிகர் கூட்டம்

இந்த அனைவரின் சாதனையும் தற்போது வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே 14 வயதில் முறியடித்திருக்கிறார். ஐபிஎல் அறிமுகத்துக்கு பின், வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியான சாதனைகளை முறியடித்துள்ளார்.

அதில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் மற்றும் U19 மட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையும் அடங்கும், இளம் வயதிலேயே இவர் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருவதால், இவருக்கென பெருரசிகர் கூட்டமே உருவாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in