

தர்மசாலாவே அவரின் 3வது இடம்
Abhishek Sharma Record : இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் நடந்த இந்தியா-யுஏஇ ஆசிய கோப்பை போட்டியின் போது அபிஷேக் சர்மா முதல் முறையாக ஒரு சிக்ஸருடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.
அதே போல் செப்டம்பர் 21-ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியின் போது, ஷாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார்.
முதல் பந்தில் சிக்சர்
இதோ தர்மசாலா போட்டியில் அதனை மூன்றாவது முறையாக செய்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
முதல் பந்தில் சிக்ஸ்ர் அடித்த இந்திய வீரர்கள்
இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் இந்தியர் ரோஹித் சர்மா தான். மார்ச் 2021ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஜூலை 2024-ல் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே போட்டியின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் போட்டியை சிக்ஸ் அடித்தே தொடங்கினார்.
பிப்ரவரி 2, 2025 அன்று சஞ்சு சாம்சனும் இந்திய அணியின் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தொடங்கினார்.
4 போட்டிகளில் 1569 ரன்கள்
அபிஷேக் இந்த சாதனையை மூன்று முறை செய்துள்ளார். அதே நேரத்தில் ரோஹித், யஷஸ்வி மற்றும் சஞ்சு ஆகியோர் தலா ஒரு முறை செய்துள்ளனர்.
அபிஷேக் சர்மா இந்த ஆண்டு இன்னும் இரண்டு டி20 போட்டிகளை விளையாட வேண்டியுள்ளது. இதனால் இந்த சாதனையை அவர் இன்னும் நீட்டிக்க முடியும்.
இதற்கிடையே, 2025-ல் இதுவரை விளையாடிய 40 டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா 1,569 ரன்கள் எடுத்துள்ளார்.
கோலியின் முதலிடத்தை தட்டி பறிப்பாரா அபிஷேக்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் அவர் குறைந்தது 46 ரன்கள் எடுத்தால், ஒரு ஆண்டில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிக டி20 ரன்கள் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் முறியடிப்பார்.
2016-ம் ஆண்டில், கோலி 31 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 1,614 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்து வருகிறது.
நிக்கோலஸ் பூரனை மிஞ்சும் அபிஷேக்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் நிக்கோலஸ் பூரன், ஒரு ஆண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
2024ம் ஆண்டில், பூரன் 76 போட்டிகளில் விளையாடி மொத்தம் 2,331 ரன்கள் எடுத்தார். பூரனின் சாதனையை இந்த நேரத்தில் முறியடிப்பது அபிஷேக்கிற்கு கடினம். ஆனால் எதிர்காலத்தில் பூரனை மிஞ்சும் திறன் அவருக்கு உள்ளது.
தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் அபிஷேக் தற்போது அதை விஞ்சும் சாதனைகளை படைத்து வின்னை தொடுவார் என்று அவரது ரசிகர்ளால் எதிர்பார்க்கப்படுகிறது.