

Indian Government Constructs 145 Houses for Sri Lankan Tamils: Lieutenant Governor C.P. Radhakrishnan Expresses Pride!
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின் கீழ், புதிதாகக் கட்டப்பட்ட 145 வீடுகள் இலங்கைத் தமிழர் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொழும்புவில் நடைபெற்ற விழா
கொழும்புவில் நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீடுகளைத் திறந்து வைத்தார்.
வீடு கட்டித்தரும் திட்டத்தின் விவரங்கள்
வீடு கட்டித்தரும் மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்த 145 வீடுகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 4,000 வீடுகள் இலங்கைத் தமிழர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
50000 வீடுகள், ஒட்டுமொத்த சாதனை
இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு இதுவரை மொத்தம் 50,000 வீடுகளைக் கட்டித் தந்துள்ளதாகக் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
நான்காம் கட்ட திட்டத்தின் அடுத்த இலக்கு
நான்காம் கட்ட திட்டத்தின் மூலம் மேலும் 10,000 வீடுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் நெகிழ்ச்சி
நிகழ்ச்சியில் உரையாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன், "இந்திய வம்சாவளித் தமிழர்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிர்ப்புள்ள உறவுப்பாலமாக விளங்குகிறார்கள்.
உறவுகளின் பாலம்
இந்திய அரசும், மக்களும் இலங்கைத் தமிழர்களை எப்போதும் தங்கள் இதயத்தில் நிரந்தர இடத்தில் வைத்துள்ளனர்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
துயர் துடைத்த இந்தியா
கடந்த காலங்களில் ஏற்பட்ட 'டித்வா' புயலின் போது, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு 'சாகர் பந்து' நடவடிக்கை மூலம் இலங்கைக்குத் தோள் கொடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
எத்தகைய சூழலிலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர் தனது உரையில் வாக்குறுதி அளித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது
இந்திய வம்சாவளித் தமிழர் சமூகம், இரு நாடுகளுக்கிடையே ஒரு உயிர்ப்புள்ள உறவுப்பாலமாக விளங்குகிறார்கள் என்று கூறிய அவர், இந்திய அரசும், இந்திய மக்களும் - இலங்கையில் வாழும் தமிழ் மக்களை எப்போதும் தங்கள் இதயத்தில் நிரந்தர இடத்தில் வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும்
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற குறளுக்கு ஏற்ப பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு டித்வா புயலின் போது ‘சாகர் பந்து’ நடவடிக்கை மூலம் உடனடியாக உதவியதைக் குறிப்பிட்ட அவர் , என்றும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
====