மும்பை 26/11 தாக்குதல் : 166 உயிர்களை பலிகொண்ட கோர சம்பவத்தின் 18வது ஆண்டு நினைவு நாள், அனுசரிப்பு..!

நாட்டையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல் 2008 நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்...
18 Years of 26/11: Remembering the Heroes and Victims of Mumbai Terror Attacks
18 Years of 26/11: Remembering the Heroes and Victims of Mumbai Terror AttacksAi Generated
1 min read

18 வருடம் கடந்தும் துயரில் இந்தியா :

இந்தியாவின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத கறுப்பு நாட்களில் ஒன்று நவம்பர் 26. கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மும்பையின் முக்கியமான இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், சுமார் 60 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதில் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்தனர் :

இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

நவம்பர் 23-ம் தேதி கராச்சியில் இருந்து கடல் வழியாகப் புறப்பட்ட அவர்கள், இந்திய மீன்பிடிப் படகைக் கைப்பற்றி மும்பை கடற்கரையை வந்தடைந்தனர்.

அங்கிருந்து பல குழுக்களாகப் பிரிந்த பயங்கரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல், ஓபராய்-டிரைடென்ட் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்ட் கஃபே உள்ளிட்ட 13 இடங்களில் துப்பாக்கிச்சூடு, கையெறி குண்டு வீச்சு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

60 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டை :

தாக்குதல் தொடங்கியதும் மும்பை காவல்துறையினர், ராணுவத்தினர், கடற்படை கமாண்டோக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையான NSG கமாண்டோக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. ஹோட்டலின் ஒரு பகுதியில் தீப்பற்றி, கரும்புகை வெளியேறிய காட்சிகள் அப்போது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

நவம்பர் 29-ம் தேதி காலை வரை நீடித்த இந்த நடவடிக்கையில், 9 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

166 பேர் உயிரிழப்பு – நாட்டையே உலுக்கிய சோகம்:

இந்தக் கொடூரத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரும், 26 வெளிநாட்டினரும் அடங்குவர். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 238 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக, தீவிரவாதத் தாக்குதல்களை விரைவாக எதிர்கொள்ள NSG படைகளுக்கான மையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டன.

======================