
47 IAS Officers in One Village : உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள மடோபட்டி என்ற சிறிய கிராமத்தில் 4,000 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். மொத்தம் 75 குடும்பங்கள் கொண்ட மடோபட்டியில், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு உயர் பதவியிலுள்ள அரசு அதிகாரி இருக்கின்றனர்.
1952ஆம் ஆண்டு இந்த கிராமத்தைச் சேர்ந்த இந்து பிரகாஷ் சிங் என்பவர் முதல்முறையாக UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு சேவையில் (IFS) சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, 1955ல் வினய் குமார் சிங் என்பவர் UPSC தேர்வில் IAS அதிகாரியாக தேர்ச்சி பெற்று பீகார் மாநிலத்தின் முதன்மை செயலராக பணியாற்றியவராகும்.
மடோபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ISRO, பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் வேர்ல்டு பாங்கில் கூட உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளர். இக்கிராமத்தின் இளையோர்களுக்கு சிறுவயதிலிருந்தே UPSC தேர்வில் வெற்றி பெறும் தீவிர ஆர்வம் காணப்படுகிறது.
மேலும் படிக்க : Vasanthi Devi : முனைவர் வே. வசந்திதேவி : இணையற்ற கல்வி ஆளுமை
மேல்நிலை பள்ளி முடித்தவுடன் அவர்கள் UPSC தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த திட்டமிட்ட முயற்சியே இக்கிராமத்தை இந்தியாவின் "UPSC கிராமம்"(UPSC Factory) என பெருமையுடன் அழைக்க வைக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது.