நடைபாதையில் வாகனம் ஓட்டிய நபரை தடுத்த மூதாட்டி: குவியும் பாராட்டு

வாகன நெரிசலைத் தவிர்க்க நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரை தடுத்து நிறுத்திய கேரளத்தை சேர்ந்த பிரபாவதியை, மோட்டார் வாகனத் துறை தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது
A brave woman in Kerala blocked a scooter on a footpath, forcing the rider back onto the road
A brave woman in Kerala blocked a scooter on a footpath, forcing the rider back onto the roadgoogle
1 min read

கேரள மோட்டார் வாகனத் துறையின் பாராட்டு

வாகன நெரிசலின் பொது கூட நெரிசலை தவிர்க்க நடைபாதையில் வாகனத்தை ஓட்டிய நபரை தடுத்து நிறுத்திய பிரபாவதி அம்மாளின் துணிச்சலுக்கு கேரள மோட்டார் வாகனத் துறை பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல், இயக்கியவரின் ஓட்டுநர் உரிமையையும், ரத்து செய்துள்ளது.

நடைபாதை என்பது நடப்பதற்கு

கேரள மாநிலம் எரஞ்சிபாலம் பகுதியில் சாலை நெரிசலை தவிர்க்க ஒருவர் நடைபாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நிலையில்

அவ்வேளையில் எதிரே வந்த மூதாட்டி ஒருவர் ”நடைபாதை என்பது நடப்பதற்கு” என்ற வகையில் வாகனத்தை தடுத்து நிறுத்தி சாலையில் வாகனத்தை இயக்குமாறு கூறினார்.

ஆனால் ஒட்டி வந்த நபர் தொடர்ந்து முன்செல்ல முயன்றபோது, எதிரே சென்று தடுத்து நிறுத்தினார் .

மூதாட்டியின் துணிச்சல் செயலுக்கு பாராட்டு

எதிரே வந்த வாகனஓட்டியை இயக்கிய நபரை சாலைக்கே சென்று இயக்குமாறு தடுத்து நிறுத்திய நபரை பலரும் பாராட்டி வருகின்றனர் .

கேரள வாகன துறை இவரின் வீட்டிற்க்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரல்

இவரின் இந்த துணிச்சல் மிக்க செயல் சோசியல் மீடியாவில் பரவிய காரணத்தினால் பலரும் இவர் யார் என்று தேடி வருகின்றனர் .மேலும் பலதரப்பு மக்களும் இவரின் செயலை பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர் .

முன் உதாரணம்

வயது முதிர்ந்த நிலையிலும் வாகனத்தை தடுத்து நிறுத்திம் துணிச்சலுக்கு ஓர் முன்னுதாரணமாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

======