தூங்குவதற்காகவே திரையரங்கு: சீனாவில் தொடங்கிய வினோதமான திட்டம்!

தூங்குவதற்காக திரையரங்கமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்..ஆனால் அதுதான் உண்மை.
A movie theater just for sleeping: A bizarre scheme launched in China!
A movie theater just for sleeping: A bizarre scheme launched in China!source: google,ai
1 min read

சீனாவில் உள்ள லுமியாய் திரையரங்கில் வேலை நாட்களில் மதியம் தூங்குவதற்கென்றே சிறப்பு சேவை தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சலிப்பில் தூங்குவதில்லை; தூங்குவதற்கே கூட்டம்!

பொதுவாக திரையரங்குகளில் படம் பார்க்கும்போது அத்திரைப்படம் சலிப்புத் தட்டினால் சிலர் தூங்குவதைப் பார்த்திருப்போம்.

ஆனால், இங்கு சீனாவில் உள்ள ஒரு திரையரங்கிற்கு தூங்குவதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். தூங்குவதற்காக திரையரங்கமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்..ஆனால் அதுதான் உண்மை.

சீனாவில் ஷான்சி (Shaanxi) மாநிலத்தில் அமைந்துள்ள லுமியாய் (Lumiai) என்ற திரையரங்கு தான் இந்த வினோதமான சேவையை சீன மக்களுக்கு வழங்கி வருகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

சீனாவில் வேலை நாட்களில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், காலியாக இருக்கும் இருக்கைகளைப் பயன்படுத்தி வருவாய் ஈட்ட இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலை நாட்களில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை வாடிக்கையாளர்கள் இந்த திரையரங்கிறகு வந்து நிம்மதியாக தூங்கலாம்.

இதற்காக பிரத்யேகமாக 76 இருக்கைகள் கொண்ட இரண்டு தனி அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இருக்கைகளை முழுமையாக சாய்த்து படுவசதியாக படுத்துக் கொள்ள முடியும்.

கூடுதல், பிரத்யேக வசதிகள்

கூடுதல் சலுகையாக இத்திரையரங்கில் தூங்குபவர்களுக்கு கண்களை மூடும் மாஸ்க், போர்வைகள், காபி மற்றும் பானங்கள் குறைந்த தொகையில் அதாவதௌ வெறும் 5.9 யுவான் இந்திய மதிப்பில் ரூ.70க்கு வழங்கப்படுகிறது.

குறட்டை விடுவோருக்குத் தனி அரங்கு

தூங்குவதற்கு திரையரங்கா என்றே ஆச்சர்யப்படும் உங்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக இங்கு குரட்டை விடுபவர்களுக்காக தனி அரங்கு என்று சொன்னால் நம்ம முடிகிறதா?

அதுவும் உண்மை தான். பிறருக்கு இடையூறாகக் குறட்டை விட்டு தூங்குபவர்கள், மக்கள் குறைவாக இருக்கும் மற்றொரு அரங்கிற்கு மாற்றி, தூங்குவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கட்டண விவரம்

இந்த சேவைக்கான மாதச் சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

ஒருவருக்கு ( மாதத்திற்கு) : சுமார் 39.9 யுவான் (சுமார் ரூ.470)

இருவருக்கு: சுமார் 599 யுவான் (சுமார் ரூ.700)

மதிய தூக்கமும் மக்களின் வரவேற்பும்

சீன கலாச்சாரத்தில் மதிய நேரத்தில் தூங்குவது ஒரு பொதுவான பழக்கமாகும். அங்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிற்பகல் வேளையில் குறைந்தது 30 நிமிடங்களாவது தூங்குவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

திரையரங்கின் இந்த சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in