விமான பயணிகளுக்கு குட் நியூஸ் : இனி விமான டிக்கெட்டை ரத்து செய்ய எந்த கட்டணம் தேவையில்லை..

Indian Airlines Ticket Cancellation Charges : விமான டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Indian Airlines have been ordered not to charge any fees for flight tickets cancelled within 48 hours
Indian Airlines have been ordered not to charge any fees for flight tickets cancelled within 48 hoursSource : Google
1 min read

சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள்

Indian Airlines Ticket Cancellation Charges : விமான டிக்கெட்களை முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது குறைந்த அளவிலேயே ரீபண்டு’ பணம் வழங்கப்பட்டு வந்தது. இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாகியிருந்தது .

பயணிகளின் இழப்பை சரிகட்ட விமான நிறுவனங்கள் மற்றும் முன்பதிவு ஏஜென்சிகளிடையே போட்டாபோட்டி நடந்தது

பயணர்களின் கோரிக்கை

இதன் சிரமத்தை தவிர்க்க வேண்டும் மற்றும் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் ரத்து முறையில் மாற்றம்

இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தி இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகளை அமல்படுத்தியது.

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவு

அதேபோல், விமான பயண டிக்கெட்டுகள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு முழுத்தொகையையும் திரும்ப அளிக்கும் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்றும் ,மேலும் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நடைமுறை அமலுக்கு வருகிறது

24 மணிநேரத்துக்குள் டிக்கெட்டில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற மார்ச் 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in