
AP Free Bus Scheme for Ladies Start Date 2025 : ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பெண்களுக்கான இலவசபேருந்து பயணத்திட்டம்(Free Bus Scheme) குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி, தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் வரும் 15-ம் தேதி முதல், அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘ஸ்ரீ சக்தி’(Sri Shakti Scheme) என பெயரிட்டுள்ளார்.
ஸ்ரீ சக்தி திட்டத்துக்காக 6,700 அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்த, ஏற்கெனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தியது. ஆந்திர மாநிலத்தில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள், மாநகரங்கள் வரை என அனைத்து இடங்களுக்கும் ‘ஜீரோ டிக்கெட்’ முறையில் பெண்கள் அரசுப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
மேலும் படிக்க : 'ஓசி' என்று மகளிரை அவமதிக்கும் திமுக அரசு
பெண்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்(AP Free Bus Documents) என ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இத்திட்டத்துக்காக அரசு ரூ.1,950 கோடி செலவிடுகிறது. இவ்வாறு அமைச்சர் எம். ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.