நயினார் நாகேந்திரன் கைது- அண்ணாமலை எக்ஸ் பதிவில் கண்டனம்!

Annamalai Condemns DMK on Nainar Nagendran Arrest : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்தற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Annamalai Condemns DMK Government on Nainar Nagendran Arrest for Thiruparankundram Deepam Issue Case Update in Tamil
Annamalai Condemns DMK Government on Nainar Nagendran Arrest for Thiruparankundram Deepam Issue Case Update in TamilGoogle
1 min read

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்

Annamalai Condemns DMK on Nainar Nagendran Arrest : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எழுந்த பிரச்சனைக்கு மனுதாரார்களின் அடிப்படையில் வழக்கை மதுரை அமர்வு உயர்நீதிமன்றம் விசாரணை செய்து. அதனை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அமர்விற்கு கைமாற்றியது. இதனை தீர விசாரதித்த நீதிபதி சாமிநாதன், மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன், நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளார் எனவும், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம், அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோருக்கு அனுமதி கொடுக்காமல் காவல்துறை,தற்போது அவர்களை கைதும் செய்துள்ளனர். ஆனால், நேற்றைய தீர்ப்பையும் அவமதித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

அண்ணாமலை எக்ஸ் பதிவு

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருப்பரங்குன்றம் கோயில் மலையில்(Thiruparankundram Deepam Issue) பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை ஹிந்து விரோத திமுக அரசு மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா, மறறும் நிர்வாகிகளை கைது செய்த தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவின் தொடர்ச்சியான தடை நீதிமன்ற அதிகாரத்தை அவமதிப்பதாகும்

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை அமைதியாகப் பின்பற்றவும், பாரம்பரியத்தை மதிக்கவும் முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்துள்ள அவர், 144வது பிரிவு ஏற்கனவே மாண்புமிகு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியின் தொடர்ச்சியான தடை நீதித்துறை அதிகாரத்தை அப்பட்டமாக அவமதிப்பதாகும் எனறும் அவர் கூறினார்.

ஹிந்து விரோத திமுக நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும்

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், ஹிந்து விரோத திமுக அரசு மேலும் மீறாமல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in