அதிகாரபூர்வ அறிவிப்பு
AR Rahman Brand ambassador of Yamaha Music in India : இசைக் கருவி தயாரிப்பு நிறுவனமான யமஹா மியூசிக் இந்தியா, தனது விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்
ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் எனது 12 வயதில் இருந்தே யமஹா இசைக் கருவிகள் எனது இசைப் பயணத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது என்றும்
இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம், எனது இசைப் பள்ளியும் யமஹா இசைக் கருவிகளை பயன்படுத்தும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையை கலை நகரமாக மாற்ற வேண்டும்
சென்னையை உலகின் கலைத் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே என் கனவு . இதற்காக எங்களது பள்ளியில் இசைக்குழுவை உருவாக்கி அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய ரஹ்மான்
ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய ரஹ்மான் இன்றைய காலத்தில் ஏஐ மூலம் பாடல்களை உருவாக்கலாம் ,ஆனால் ஒரு மனிதன் மேடையில் ஏறி பாடுவதற்கும் ,ஒரு ஏஐ அதனை செய்வதற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகவும் ,இந்த நேரடி அனுபவம் மதிப்புமிக்கதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்
ஏஐ தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியாது. காலங்கள் மாறினாலும் மனித உணர்வுகளுக்கான மதிப்பு அதிகரிக்கவே செய்யும் என்று கூறினார்
இது குறித்து யமஹா நிறுவனத்தின் மேலிட இயக்குனர் பேசியதாவது
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விளம்பரத் தூதராக நியமித்திருப்பது இசையின் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கும் இளைஞர்களை இது ஊக்கப்படுத்துவதாக அமையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.