

ஓலா, ஊபர் போல குறைந்த கட்டணங்களில் பயணிக்கலாம்
Bharat Taxi Launch in India : மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பாரத் டாக்ஸி, இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன முன்பதிவு செயலியாகும்.
"ஓட்டுநர்களே உரிமையாளர்கள்"
"ஓட்டுநர்களே உரிமையாளர்கள்" (Sarathi Hi Malik) என்ற தாரக மந்திரத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு என்ன லாபம்? சர்ஜ் பிரைஸிங் இல்லை (No Surge Pricing): மழைக்காலங்களிலோ அல்லது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலோ மற்ற செயலிகளைப் போல கட்டணம் பல மடங்கு உயராது.
மறைமுக கட்டணங்கள் இல்லை
20-30% குறைந்த கட்டணம்: ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களை விட சராசரியாக 20 முதல் 30 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்.
முன்பதிவு செய்யும் போதே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். மறைமுகக் கட்டணங்கள் ஏதுமில்லை.
ஓட்டுநர்களுக்கு பயன்:
தனியார் நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் 20% முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் ஈட்டும் முழுத் தொகையும் அவர்களுக்கே சேரும்.
(தினசரி அணுகல் கட்டணமாக ₹30 மட்டும் செலுத்த வேண்டும்). சமூகப் பாதுகாப்பு: ஓட்டுநர்களுக்கு ₹5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் குடும்ப ஆரோக்கியக் காப்பீடு வழங்கப்படுகிறது என்பது இதில் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
பங்குதாரர்களாக ஓட்டுனர்கள்
கூட்டுறவு உரிமம்: இந்த செயலியில் இணையும் ஓட்டுநர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அவர்கள் இந்த கூட்டுறவு அமைப்பின் பங்குதாரர்களாகவும் கருதப்படுவார்கள்.
பாதுகாப்பு அம்சங்கள் KYC சரிபார்ப்பு: அனைத்து ஓட்டுநர்களும் ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் மூலம் முறையாக சரிபார்க்கப்படுகிறார்கள்.
சிறப்பு வசதிகள்
நேரடி கண்காணிப்பாக பயணிகள் தங்களின் பயணத்தை குடும்பத்தினருடன் நேரலையில் பகிர்ந்து கொள்ளலாம். இத்துடன் SOS அவசர உதவி என ஆபத்துக் காலங்களில் உடனடியாகக் காவல் துறையைத் தொடர்பு கொள்ள சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செயலியை பதிவிறக்கம் செய்ய ஆண்ட்ராய்டு (Android): கூகுள் பிளே ஸ்டோரில் "Bharat Taxi" எனத் தேடிப் பதிவிறக்கலாம். ஐபோன் (iOS): ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்தச் செயலி கிடைக்கிறது.
பதிவு செய்ய உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, வரும் OTP-ஐப் பயன்படுத்தி எளிதாக இணைந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.