PM Narendra Modi Launch Agriculture Scheme in Delhi
PM Narendra Modi Launch Agriculture Scheme in Delhi

முந்தைய அரசு தொலைநோக்கு பார்வையில்லாத அரசு - நரேந்திர மோடி!

PM Narendra Modi Launch Agriculture Scheme in Delhi : புதுடில்லி: வேளாண் வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடி திட்டங்களை, டில்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Published on

PM Narendra Modi Launch Agriculture Scheme in Delhi : டில்லியில் இன்று வேளாண்துறை வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு பண்ணைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறையின் செயல்பாடுகளால் விவசாயம் தளர்ச்சி அடைந்தது. அதை மேம்படுத்த 2014 முதல் திட்டங்கள் வகுக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

விவசாயத்தின் முக்கிய பங்கு

மேலும் பேசிய அவர், முக்கிய பங்கு தற்போது உற்பத்தி முதல் சந்தைப் படுத்துதல் வரை விவசாயம் மேம்பட்டு ள்ளது. விவசாயிகள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முந்தைய அரசு விவசாயத் துறையைப் புறக்கணித்தது, தொலை நோக்குப் பார்வையும் இல்லை. விவசாயத் துறை வளர்ச்சியை அதிகரிக்க கடந்த 11 ஆண்டுகளில் அரசு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

விவசாயம் செழித்து காணப்படும் மாவட்டங்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும். புரதப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோதுமை மற்றும் அரிசியைத் தாண்டி பயிர்களை பல்வகைப்படுத்த வேண்டும். பருப்பு வகைகளில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்க பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நன்மைகள் அதிகம்

ரூ.13 லட்சம் கோடி முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி மானியம் உரங்களுக்காக வழங்கப்பட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.13 லட்சம் கோடி உரங்களுக்காக மானியம் வழங்கி உள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகளுக்கு அதிகபட்ச நன்மைகளை அளித்துள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க : CETA 2025 : இந்தியா - இங்கிலாந்து உறவில் பரஸ்பர நம்பிக்கை - மோடி!

விவசாயிகளுக்கு பங்கு உண்டு

உற்பத்திச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். இதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு விவசாயிகளுக்கு பெரிய பங்கு உண்டு. உணவில் மட்டும் இந்தியா தன்னிறைவு பெறாமல், உலக சந்தைக்கு ஏற்றுமதி சார்ந்த பயிர்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in