விவாதம் இன்றி முக்கிய மசோதக்கள் நிறைவேற்றம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம்

மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் நிறைவேற்றியதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டத்தை பதிவு செய்துள்ளார்
bill passed without debate: Congress MP Manickam Tagore condemns
bill passed without debate: Congress MP Manickam Tagore condemns google
1 min read

விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன , ஒன்றிய அரசின் இந்த போக்கு கண்டித்தக்கது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனங்களை தெரிவித்துள்ளார்

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது

உணவு விநியோக தளங்களை விட வேகமாக டெலிவரி செய்யும் புதிய சாம்பியன் - மோடி-ஷா 'Bulldozer Raj'! மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க, எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் "Fast Delivery" செய்துள்ளனர்.

மசோதாக்களும் அனுப்பப்பட்ட நேரம்:

1. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா - 1 நிமிடம்

2. MSME வளர்ச்சி (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்

3. வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா - 2 நிமிடங்கள்

4. வங்கியாளர்களின் புத்தகச் சான்று மசோதா - 4 நிமிடங்கள்

5. தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா - 5 நிமிடங்கள்

6. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா - 6 நிமிடங்கள்

7. கேரளா (பெயர் மாற்றம்) மசோதா - 9 நிமிடங்கள்

8. தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா - 9 நிமிடங்கள்

9. தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா - 14 நிமிடங்கள் (வந்தே மாதரம்) தன் துறை சார்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போதும் 23 நாட்களாக பாராளுமன்றம் வராமல்

மக்கள் இதுகுறித்து நிச்சயம் கேள்வி கேட்பார்கள் ,மாணிக்கம் தாகூர்

கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து பிரதமர் ஒளிந்து கொண்டு, எந்த விவாதமுமின்றி மசோதாக்களை நிறைவேற்றும் இந்த மோடி-ஷா அரசின் சர்வாதிகார ஆணவப்போக்கு உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும்;

மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், உங்களால் வெகுநாளைக்கு தப்ப முடியாது, இதற்கெல்லாம் மக்களும் நிச்சயம் கேள்வி கேட்பார்கள்!

என பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளார்

============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in