20 ஆண்டுகள், 95 தேர்தல்கள், ராகுலின் தோல்வி:வரைபடம் வெளியிட்ட பாஜக

BJP on Congress: காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐடி பிரிவு தலை​வர் அமித் மாள​வியா வரைபடம் வெளியிட்டு விமர்​சித்​துள்​ளார்.
BJP IT Wing Chief Amit Malviya Criticized Congress Failure Of Rahul Gandhi in Various Election Include Bihar Election 2025
BJP IT Wing Chief Amit Malviya Criticized Congress Failure Of Rahul Gandhi in Various Election Include Bihar Election 2025Google
1 min read

தேசிய ஜனநாயக கூட்டணி

BJP Criticized Congress : பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத - பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக வாக்குகளை பெற்று தொகு​தி​களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள், விளையாட ஆரம்பித்தனர்.

அமித் மாளவிய காங்கிரஸின் தோல்வி குறித்து பதிவு

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு வரைபடம் வெளி​யிட்​டார். அதில் ராகுல் காந்தி சந்​தித்த தேர்​தல்​களில் அடைந்த தோல்வி​கள் குறித்து பட்​டியலிட்​டுள்​ளார்.

இதுகுறித்து அமித் மாள​வியா வெளி​யிட்ட பதி​வில், ‘‘இன்​னொரு தேர்​தல்​, இன்​னொரு தோல்​வி. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்​டு​களில் ராகுல் காந்​தி​யின் வழி​காட்​டு​தலில் காங்​கிரஸ் கட்சி பல மாநிலங்​களில் ஆட்​சியை இழந்​துள்​ளது.

தேர்​தல் நிலைத்​தன்​மைக்கு விருது வழங்​கலாம் என்​றால், எல்லா விருதுகளை​யும் ராகுல் காந்தி தட்டிச் செல்​வார்’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

20 ஆண்டுகளாக காங்கிரஸ் தோல்வி அடைந்த மாநிலங்கள்

அமித் மாள​வியா வெளி​யிட்ட வரைபடத்​தில், இமாச்​சல் (2007, 2017), பஞ்​சாப் (2007, 2012, 2022), குஜ​ராத் ( 2007, 2012, 2017, 2022), மத்​திய பிரதேசம் ( 2008, 2013, 2018, 2023), மகா​ராஷ்டிரா (2014, 2019, 2023) மற்​றும் டெல்​லி, ஹரி​யா​னா, உ.பி., பிஹார், வடகிழக்கு மாநிலங்​கள், ஒடி​சா, ஆந்​திரா யூனியன் பிரதேசங்​கள் என மொத்​தம் 95 தேர்​தல்​களில் ராகுல் காந்​தி​யின் கீழ் காங்​கிரஸ் கட்சி தோல்வி​களை சந்​தித்​துள்​ளது என்​று கூறப்​பட்​டுள்​ளது.

காங்கிரஸின் இந்த தோல்வியால், பீகார் காங்கிரஸ் தொண்டர்கள், விரக்தியில் இருக்கும் நிலையில், இதர மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், ஆழமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in