

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தை திவாலாக்கி, அதன் வளங்களை அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
ஆர். அசோக் தனது எக்ஸ் தள ஒரு பதிவில், திரு.ராகுல்காந்தி, இதுதானா உங்கள் புகழ்பெற்ற 'கர்நாடக மாடல்'? ஊழல் மற்றும் சுரண்டலால் கர்நாடகம் திவாலாகிவிட்டது. எட்டு அரசு துறைகளில் இருந்து 33,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை ஒப்பந்ததாரர்கள் கோருகின்றனர். பாசனத்துறை முதல் வீட்டுவசதி, பொதுப்பணித்துறை முதல் தொழிலாளர் துறை வரை - ஒவ்வொரு துறையும் மூச்சுத்திணறுகிறது, ஏனெனில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகேசிவகுமார் ஆகியோர் தங்கள் பதவிகளை காப்பாற்றவும், அரசியல் விளையாட்டுகளுக்கு மாநில நிதியை வறண்டு போகச் செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வசூல், கமிஷன், ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அரசு செயல்படுவதாக கூறினார். ஒப்பந்ததாரர்கள் பணம் கேட்கும்போது, அரசு 'நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்' என்கிறது. குடிமக்கள் உடைந்து போன உள்கட்டமைப்பு குறித்து கண்ணீர் விடும்போது, அவர்கள் ஆணவத்துடனும் மௌனத்துடனும் பதிலளிக்கின்றனர்.
மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள் பேசினால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள், அமதிக்கப்படுகிறார்கள். இது மக்களின் அரசு அல்ல, வசூல், கமிஷன், ஊழலுக்காக மட்டுமே இயங்கும் அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? என்று அவர் கூறினார்.
ஒப்பந்ததாரர்களின் பில்களை தீர்க்க எவ்வளவு சதவீதம் கமிஷன் கேட்கிறீர்கள்? இதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பங்கு என்ன? உயர்மட்டத்தின் முகவர்களான ரண்தீப் சுர்ஜேவாலா மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோருக்கும் பங்கு உள்ளதா?"
கர்நாடக காங்கிரஸ் அரசு வெட்கப்பட வேண்டும். நீங்கள் அரசை திவாலாக்கிவிட்டீர்கள். ஒப்பந்ததாரர்களின் நிலுவைத்தொகையை கொடுக்காமாலும், அவற்றை சரிசெய்வதற்கு, நீங்கள் 80% வரை கமிஷன் கோருகிறீர்கள். உங்கள் அரசின் வெட்கமற்ற ஊழல் மற்றும் கமிஷன் பேராசையால், மாநிலத்தில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பாசாங்கு ஆட்சி இன்னும் எவ்வளவு காலம் தொடரும், ராஜினாமா செய்து, உங்களுக்கு மிச்சமிருக்கும் சிறிதளவு கண்ணியத்தையாவது காப்பாற்றுங்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.