
Hindi Marathi Controversy Row : மராத்தி பேசவில்லை என்ற காரணத்தால் ஏழைகளை அடிக்கிறீர்கள். ஆனால் முகேஷ் அம்பானி மராத்தி கொஞ்சம் தான் பேசுவார். அவரிடம் சென்று உங்கள் சக்தியை காட்டுவீர்களா என்று பாஜக விமர்சித்துள்ளது.
மராத்தி-இந்தி மொழி சர்ச்சை(Hindi Marathi Controversy) மீதான பின்னணியில், மஹாராஷ்டிரா நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே(Nishikant Dubey) கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சிக்கிமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராத்தி பேசவில்லை என்ற காரணத்தால் ஏழைகளை அடிக்கிறீர்கள். ஆனால் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) மராத்தி கொஞ்சம் தான் பேசுவார். அவரிடம் சென்று உங்கள் சக்தியை காட்டுங்கள் என்று கூறிய துபே, தாக்கரே குடும்பத்தினர் மீது பல கேள்விகள் எழுப்பினார்.
மேலும், மஹீம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர். தைரியம் இருந்தால் அங்கு செல்லுங்கள். எஸ்பிஐ தலைவர் மராத்தி பேச மாட்டார். அவரை அடிப்பீர்களா எனவும் சவால் விடுத்தார்.
முன்னதாக ராஜ் தாக்கரே, மராத்தி பேச மறுப்பவர்களை அடியுங்கள், ஆனால் வீடியோ எடுக்காதீர்கள்" என தனது கட்சியினருக்கு உத்தரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, நிஷிகாந்த் துபே, "இந்தியா முழுவதும் தமிழும், தெலுங்கும், உருதும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் தாக்கச் துணிந்தால், தமிழ்நாடு, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு வாருங்கள் என்று கூறியிருந்தார்.