பிரிக்ஸ் மாநாடு: 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடியின் அரசுமுறை பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
பிரிக்ஸ் மாநாடு: 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
ANI
1 min read

உலக நாடுகளின் உறவை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி, ஜூலை 2-ஆம் தேதி முதல் 8 நாள் அரசுமுறை பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரேசிலில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் பிரதமர் மோடி பிரேசிலில் இருந்து கானா, ட்ரினிடாட், டுபாக்கோ, அர்ஜென்டினா, நமீபியா நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த 5 நாடுகள் பயணம் இந்தியாவுடனான நட்புறவை மேலும் வலுப்புடுத்த உதவும். பிரிக்ஸ் மாநாட்டில் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in