

ஆதார் அட்டையின் மாற்றம்
UIDAI Launches 'Udai' as New Aadhaar Mascot : நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரின் விரல் ரேகை, கருவிழி படலத்தின் பதிவுகளை பெற்று, 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அரசு நலத்திட்டங்கள், வங்கிக் கணக்கு துவங்குதல், மானியங்கள், வருமான வரி உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக உள்ளது.
இதன் மொத்த உருவாக்கத்தை ஆதார் எண் வழங்குதல், புதுப்பித்தல் போன்றவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகிக்கிறது. இதனால் இன்று இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை, கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதாருக்கு இனி மாஸ்கட் உருவம்
இந்நிலையில், அவ்வப்போது ஆதார் தனி வலைதளத்தில் சில சிக்கல்களும், குறைவான வேகமும் இருந்து வருவதால், இதில் தங்கள் தரவுகளை சேர்க்கவும், சரிபார்க்கவும் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஆனால், தற்போது குறைகளை களைந்து, ஆதாருக்கு உருவம் ஒன்றையும் வழங்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
மஸ்காட் வடிவம் உருவான முறை
அதாவது நிறுவனம், அமைப்பு, அணி, நிகழ்ச்சி அல்லது திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படும்.
இதற்கு 'ாமஸ்காட்' என்று பெயர். ஆதாருக்கான, 'மாஸ்காட்' உருவாக்கத்தில் பொது மக்கள் பங்குபெறும் வகையில் அரசின், www.mygov.in தளத்தில் இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
”உதய் மஸ்காட்”
நாடு முழுதுமிருந்து மாணவர்கள், வடிவமைப்பாளர்கள் உட்பட, 875 பேர், மஸ்காட்' சின்னங்களை வடிவமைத்து அனுப்பி இருந்தனர். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் வடிவமைத்த மஸ்காட் தேர்வு செய்யப்பட்டது.
பெயர் சூட்டும் பிரிவில் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் தேர்ந்தெடுத்த 'உதய்' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.
யு.ஐ.டி.ஏ.ஐ-யின் மஸ்கட் உருவம்
வெற்றியாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆதாரின் மஸ்காட் அறிமுக நிகழ்ச்சி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது, இதில் யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் நீல்கந்த் மிஸ்ரா பங்கேற்று ஆதார் மஸ்காட்டான உதயை அறிமுகப்படுத்தினார்.
ஆதார் தொடர்பான பத்திரிகை விளம்பரங்கள், வீடியோக்கள், போஸ்டர்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இனி, 'உதய்' சின்னத்தை வைத்து தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தனிபெயராக இருந்த ஆதாருக்கு தற்போது உருவம் வடிவமைக்கப்பட்டு எளிதில் அடையாளம் காணும் வகையில் தற்போது ஆதார் அடுத்த கட்டத்திற்கு மக்கள் மனதில் அறிமுகமாகியுள்ளதால் இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
====