தனியார் வாகன போக்குவரத்து செயலிகள் :
Central Government Launch Bharat Taxi Service App : இந்தியாவில் ஓர் இடத்தில் மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தனது சொந்த வாகனம், பொது போக்குவரத்து என்பதை தாண்டி, அதனை வணிக ரீதியாக தனியார் நிறுவனங்கள் கட்டமைத்து இன்று ரேபிடோ, ஓலா, ஊபர் என பல்வேறு வகையான போக்குவரத்து செயலிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
தனியார் வாகன செயலிகளின் கெடுபிடி
இதில் பயணிக்கும் தனியார் நிறுவன செயலிகள் பீக் அவர்களிலும் , டிமாண்டிற்கு ஏற்ற வகையிலும் கட்டணத்தை உயர்த்துகின்றன. இதனால் பீக் அவர்களில் டாக்ஸியில் செல்ல வேண்டும் என்றால் நாம் மற்ற சமயங்களை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இது போக சில சமயங்களில் ஓட்டுநர்களும் அதில் காட்டும் தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதுண்டு கேட்டால், பல வித காரணங்களுடன், செயலியே தொகையை வரிபிடித்தம் எடுத்து கொள்கிறது என காரணம் கூறுகின்றனர்.
மத்திய அரசு அதிரடி
டாக்ஸி சேவையில்(Bharat Taxi Government App) தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒரே மாதிரியான கட்டண விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் தனியார் டாக்ஸி சேவைக்கு முடிவு கட்டும் நவம்பர் 1 ஆம் தேதி(Bharat Taxi Launch Date in Tamil) முதல் மத்திய அரசின் பாரத் டாக்ஸி அறிமுகமாகவுள்ளது.
பாரத் டாக்ஸி - Bharat Taxi Service :
இதற்கான அதிகாரபூர்வ செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும்.முதல் கட்டமாக சுமார் 500 ஓட்டுநர்களும்(Bharat Taxi Driver App) பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் 5 ஆயிரம் டாக்ஸி ஓட்டுநர்களும் இந்த செயலியில் இணைவார்கள் என்று தெரிய வருகிறது. மத்திய அரசு இதனை நாட்டின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை என அழைக்கிறது. மத்திய அரசின் மின் ஆளுகை பிரிவு மற்றும் கூட்டுறவுத்துறையால் இந்த பாரத் டாக்ஸி சேவை செயல்படுத்தப்படுகிறது. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் செயலிகளுக்கு போட்டியாக இது இருக்கும் என்றும் முறையான டாக்ஸி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் டாக்ஸியின் லாபம்
தனியார் நிறுவன செயலிகளை போல ஓட்டுநர்கள் இதில் ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் மாதந்தோறும் ஒரு சந்தா தொகையை செலுத்திவிட்டு பாரத் டாக்ஸி செயலியில்(Bharat Taxi App) இணைந்து கொள்ளலாம். செயலியில் வரக்கூடிய ரைடுகளில் வாடிக்கையாளர் செலுத்தக்கூடிய முழு தொகையும் ஓட்டுநர்களுக்கே செல்லும்.எனவே ஓட்டுநர்களுக்கு இது லாபம் என்று கூறப்படுகிறது.
பாரத் டாக்ஸியின் பயன்கள்
முதலில் டெல்லியில் தொடங்கி பின்னர் மும்பை ,புனே, லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூரு, சென்னை என பல நகரங்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.இந்த பாரத் டாக்ஸி சேவையில் ரெண்டல் , லோக்கல் ட்ரான்ஸ்ஃபர், அவுட் ஸ்டேஷன் என மூன்று சேவைகளை பெறலாம். ரெண்டல் என்பது ஒரு காரை எட்டு மணி நேரம் வரை நாம் வாடகைக்கு எடுப்பதற்கு நமக்கு அனுமதிக்கிறது.
மேலும் படிக்க : ஆன்லைன் ரயில் முன்பதிவு டிக்கெட்: ஜன.முதல் வேறு தேதிக்கு மாற்றலாம்
ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணம் செய்வதற்கான சேவையை வழங்குகிறது அவுட் ஸ்டேஷன், ஒரு நகரத்திற்குள்ளேயான பயணத்திற்கான ஆப்ஷன் லோக்கல் ட்ரான்ஸ்ஃபர் ஆகும் .எனவே தற்போது இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களில் ஒரு சில கலங்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் செயல்பாடு மற்றும் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்