குஜராத், ராஜஸ்தானை மிரட்டும் சண்டிபுரா வைரஸ்
குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் சண்டிபுரா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நோயின் தீவிரத்தை கட்டுபடுத்த பாதுகாப்பு நடவடிக்கை
திவிரமாக பரவி வரும் இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு தேசிய கூட்டு நோய் பரவல் தடுப்பு மற்றும் மீட்புக் குழுவை அனுப்பு பாதுகாப்பு நடவடிக்கையை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது
மத்திய பாதுகாப்பு குழு , நோயின் தீவிரத்தை கண்டறிய வேண்டும்
தீவிரமாக பரவி வரும் இந்த சண்டிபுரா வைரஸ் குறித்து ,தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமானது மாநில கண்காணிப்பு பிரிவுகளுடன் இணைந்து வைரஸ் பரவும் விதம், நோயின் தன்மை, நோய்ப்பரவல் சூழல் மற்றும் சாத்தியமான சிகிச்சை முறைகள் குறித்த புரிதலை மேம்படுத்துவத்ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும்
மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலை வழங்குவதையும் இந்த குழு நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சுகாதார தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுவாக இந்த நோய் எவ்வாறு பரவுகிறது
பொதுவாக ,சண்டிபுரா வைரஸ் (Chandipura Virus) என்பது மணல் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் மூலம் பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும்.
இது முக்கியமாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதித்து, மூளையில் கடுமையான வீக்கத்தை (Acute Encephalitis Syndrome) ஏற்படுத்துகிறது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு இந்த நோய் பரவுவதில்லை
பொதுவாக இந்த நோய் எவ்வாறு பரவுகிறது
பொதுவாக இந்த சண்டிபுரா வைரஸானது பெண் வகை ஃபிளெபோடோமின் (Phlebotomus) மணல் ஈக்கள் கடிப்பதால் முக்கியமாகப் பரவுகிறது , குறிப்பாக மழைக்காலங்களிலும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் உள்ள சூழல்களிலும் இவை அதிகமாக உற்பத்தியாகின்றன.
உண்ணிகள் மற்றும் சிலவகை கொசுக்கள் மூலமாகவும் இது பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சண்டிபுரா வைரஸின் முக்கிய அறிகுறிகள்
இந்த சண்டிபுரா வைரஸின் அறிகுறியாக ,திடீர் மற்றும் தீவிரமான அதிக காய்ச்சல்
கடுமையான தலைவலி மற்றும் வாந்தி
உடல் சோர்வு மற்றும் தசை வலி
வலிப்பு மற்றும் மயக்கம்
நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு விரைவாக கோமா நிலைக்குச் செல்லும் அபாயம் போன்றவை பொதுவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது
================================