கேரளத்தில் ஆட்சி மாற்றம்? : காங்கிரஸ் கூட்டணி 81 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு! : மனோரமா கருத்துக்கணிப்பு!

Manorama News VMR Opinion Poll Survey 2026 : கேரளத்தில் மனோரமா நியூஸ் - சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
Change of Government in Kerala? Congress Alliance to Win Up to 81 Seats: Manorama News VMR Opinion Poll Survey 2026
Change of Government in Kerala? Congress Alliance to Win Up to 81 Seats: Manorama News VMR Opinion Poll Survey 2026source : google
1 min read

கேரளம் சட்டமன்ற தேர்தல் 2026

Manorama News VMR Opinion Poll Survey 2026 : கேரளம் மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

LDF VS UDF

இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியான இடது ஜனநாயக முன்னனிக் கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் போட்டியிடுகின்றனர்.

மனோரமா நியூஸ் - சி வோட்டர்ஸ்

இந்நிலையில் தற்போது மனோரமா நியூஸ் - சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின் ஐக்கிய ஜனநாயக முன்னணி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று 'மனோரமா நியூஸ் - சி வோட்டர்' நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

69 முதல் 81 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி

அதன்படி கேரளத்தில் உள்ள 130 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 69 முதல் 81 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைக்கும் என மனோரமா - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகளுக்கு பின்னடைவு

தற்போது ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி (LDF) 57 முதல் 69 இடங்கள் வரை மட்டுமே பெறும் எனத் தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி

மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 1 முதல் 5 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பாக, திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் பாஜக 3 இடங்கள் வரை வெல்லக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

தெற்கு கேரளாவில் இடதுசாரிகள் வலுவாக இருந்தாலும், சபரிமலை அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என கணிப்புகள் கூறுகின்றன.

சுமார் 89,693 வாக்காளர்களிடம், கடந்த டிசம்பர் 1, 2025 முதல் மார்ச் 26, 2026 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

---

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in