

UPI மற்றும் டெபிட் கார்டுகள் வழியே நடைபெறும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு (Merchant Transactions) புதிய கட்டண முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
'வணிகர் தள்ளுபடி விகிதம்'
ரூ.2,000-க்கு அதிகமான தொகையை UPI அல்லது டெபிட் கார்டு மூலமாகப் பெறும்போது 0.4% அளவு 'வணிகர் தள்ளுபடி விகிதம்' (MDR Charge) வசூலிக்கப்படும். அக்டோபர் 15-ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது.
கட்டணக் கணக்கீடு மற்றும் உச்ச வரம்பு விவரங்கள்
ரூ.2,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, ரூ.3,000 பணப் பரிமாற்றத்திற்கு ரூ.12-ம், ரூ.50,000 பரிவர்த்தனைக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்படும்.
அதிகபட்ச உச்ச வரம்பு
பரிவர்த்தனை தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் எடுத்துக்காட்டாக ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், செலுத்தும் அதிகபட்சக் கட்டணம் ரூ.300 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலையான கட்டணம்
அதேபோல் ரயில்வே, பெட்ரோல் பங்க் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசியச் சேவைப் பரிவர்த்தனைகளுக்கு, ரூ.2,000-க்கு மேல் எவ்வளவு தொகை செலுத்தினாலும் நிலையாக ரூ.5 மட்டுமே கட்டணமாகப் பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விலக்கு மற்றும் விதிவிலக்குகள்
1. தனிநபர் பரிவர்த்தனைகள்
இரு நபர்களுக்கு இடையே P2P அதாவது Person to Person இடையே நிகழும் பணப் பரிமாற்றங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.
அதேபோல் ரூ.2,000-க்கு உட்பட்ட எந்தவொரு சிறிய வணிகப் பணப் பரிமாற்றத்திற்கும் கட்டணம் கிடையாது.
2. சிறிய வணிகர்களுக்கு விலக்கு
குறிப்பாக UPI QR கோடு மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டும் சிறு வணிகர்களுக்கு இக்கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
3. பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கவனம்
இந்தக் கட்டணத்தை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செலுத்த வேண்டியதில்லை. வணிக நிறுவனங்களே இதனை செலுத்த வேண்டும்.
மேலும், இந்தத் தொகையை மத்திய அரசோ அல்லது NPCI அமைப்போ நேரடியாகப் பெறாமல், வங்கிச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கட்டணச் செயலி சேவை அமைப்புகள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
======