உலகின் மிக உயரமான செனாப் பாலத்தில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பாய்ந்த வந்தே பாரத் : புதிய சாதனை!

கத்ரா முதல் பனிஹால் வரையிலான ரயில் பிரிவில் வேகத்தை அதிகரிப்பதற்கான சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
Vande Bharat Express Speed Test Record
Vande Bharat Express Speed Test Recordsource: Ministry of Railways
1 min read

Chenab Rail Bridge Vande Bharat Express Speed Test Record

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்று புதிய சாதனை படைத்துள்ளது.

செனாப் பாலத்தின் பிரம்மாண்டம்

செனாப் ரயில் பாலம்... இது ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதுதான் உலகின் உயரமான இரும்பு வளைவுப் பாலமான ரயில் பாலமாக உள்ளது.

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் வழியாக, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம்

இந்நிலையில், செனாப் ஆற்றுப் பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் ரயில்வே பாலமான அஞ்சி பாலத்தையும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து வந்தே பாரத் ரயில் புதிய சாதனையை படைத்துள்ளது.

வடக்கு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலாளர் உஜித் சிங்ஹால் அறிவிப்பு

வடக்கு ரயில்வேயின் ஜம்மு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா முதல் பனிஹால் வரையிலான ரயில் பிரிவில் வேகத்தை அதிகரிப்பதற்கான சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

100 கிலோமீட்டர் வேகம்

அப்போது, உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தையும், இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி பாலத்தையும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்து சாதனை படைத்தது.

இதன் மூலம், கத்ரா முதல் பனிஹால் வரையிலான பயண நேரம் பெருமளவில் குறையும் என வடக்கு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலாளர் உஜித் சிங்ஹால் தெரிவித்துள்ளார்.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in