இயந்திர நாய்கள் நாங்கள் உருவாக்கவில்லை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பேராசிரியர்!

சீன தயாரிப்பான ரோபோவை, தங்கள் மாணவர்கள் உருவாக்கிய உள்நாட்டு கண்டுபிடிப்பு எனத் தவறாகச் சித்தரித்ததாக கால்கோடியாஸ் பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியதற்கு, கால்கோடியாஸ் பேராசிரியர் பதிலளித்துள்ளார்.
China Robot Dog Exhibition Row at India AI Impact Summit 2026 Not create AI dogs Professor puts an end to controversy
China Robot Dog Exhibition Row at India AI Impact Summit 2026 Not create AI dogs Professor puts an end to controversySource : Google
1 min read

சீன ரோபோ என சுட்டிக்காட்டிய வல்லுநர்கள்

China Robot Dog Exhibition Row at India AI Impact Summit 2026 : டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ மாநாட்டின் இரண்டாம் நாளில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம் ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது.

இந்த வீடியோ அதிகம் கவனம் பெற்ற நிலையில், மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது சீனாவைச் சேர்ந்த Unitree Go2 என்ற ரோபோ என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளனர்.

கண்காட்சி அரங்கை காலி செய்ய சொன்னதாக உத்தரவு

ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்டி முதலீடுகளை ஈர்க்க முயன்றதாக கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, மாநாட்டின் கண்காட்சி அரங்கை காலி செய்து வெளியேறுமாறு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பல்கலைகழக பேராசிரியர் உரை

மேலும், பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான இந்த எதிர்மறைப் பிரச்சாரம் மாணவர்களின் மன உறுதியைக் குலைப்பதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், இது சீனாவின் யூனிட்ரீ நிறுவனத்தின் ரோபோ என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. தவறான தகவல்களை அளித்ததற்காக ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் நேஹா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. கல்கோடியாஸ் நிறுவனம் மிகவும் பொறுப்பான நிறுவனம்.

மாணவர்களின் மனஉறுதியை பாதிக்கும்

இந்த இயந்திர நாயை (ரோபோ) நாங்கள் உருவாக்கவில்லை. உருவாக்கியதாகவும் நாங்கள் கூறவில்லை. இதுபோன்ற தொழில்நுட்பங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம்.

இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை அணுக மாணவர்களுக்கு நாங்கள் வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். இதனால், அவர்கள் நடைமுறை அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

மேலும், எதிர்காலத்துக்கு தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

எங்கள் பல்கலைக்கழகத்துக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கவும், கற்றுக்கொள்ளவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கடினமாக உழைக்கும் மாணவர்களின் மன உறுதியைப் பாதிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

சீனாவின் யூனிட்ரீ என்ற நிறுவனம், இத்தகைய ரோபோக்களை குறைந்த விலையில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.

பாஸ்டன் டைனமிக்ஸ் ஸ்பாட் போன்ற பல போட்டியாளர்களைவிட இத்தகைய இயந்திர நாய்கள் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

தொழில்துறை பணிகளுக்கும், பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்கும் இத்தகைய ரோபோக்கள் அதிகம் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in