குடும்பத் தலைவிகளுக்கு 2,500 : தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி

Puducherry Magalir Urimai Thogai : புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலானஅரசு குடும்ப தலைவிகள் மற்றும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை 2,500 ஆக உயர்த்தி வழங்கி இருக்கிறது.
CM N. Rangasamy Announced Magalir Urimai Thogai Financial assistance to women heads of BPL families in Puducherry News Tamil
CM N. Rangasamy Announced Magalir Urimai Thogai Financial assistance to women heads of BPL families in Puducherry News Tamilgoogle
1 min read

CM N. Rangaswamy Launch Puducherry Magalir Urimai Thogai 2026 Scheme : புதுச்சேரியில் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை ரூ. 2500 ஆக உயர்த்தி ஜனவரி 12 முதல் வழங்கப்படும் என்றுறிவித்திருந்த நிலையில் இன்று அதனை தொடங்கி வைத்தார்.

மேலும் போலி மருந்து விவகாரம் தொடர்பாக வெளிப்படையான அறிக்கை வெளியிடப்படும்” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை யாருக்கெல்லாம் பொருந்தும்

சிவப்பு நிற ரேஷன் அட்டை

புதுச்சேரியில் ஏழ்மை நிலையிலுள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள, எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த தொகை மேலும் உயர்த்தப்பட்டு ரூபாய் 2,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

மஞ்சள் நிற ரேஷன் அட்டை

மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு அறிவித்தப்படி உதவித்தொகை கோப்புகள் தயாராக உள்ளன என்றும் ,விரைவில் அட்டைதாரர் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். இதனை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

குடிநீர் திட்டம் - பூமி பூஜை

மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த குடிநீர் தர பூமிபூஜை செய்துள்ளோம். அரசு பொறுப்பேற்ற பிறகு உள்கட்டமைப்புக்கான பணிகள் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் எதிர்வரும் 50 ஆண்டுகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆயத்தமாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in