திருப்பதியில் கோடிகளில் தொடரும் ஊழல்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வைக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள் வழங்கியதில், ரூ.54 கோடி ஊழல் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
Corruption continues in Tirupati involving crores of rupees - CBI officials are investigating!
Corruption continues in Tirupati involving crores of rupees - CBI officials are investigating!gogle
1 min read

லட்டு பிராசதத்தில் கலப்படம்

tirupathi devashdanam issue ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.

பிரசாதங்களில் கலப்படம்

முதலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்புகள் கலப்பதாகவும் பல்வேறு குற்றாசட்டுகள் எழுந்த நிலையில், தரம் குறைந்த நெய்யை உபயோகித்து வருவதாகும் தெரிய வந்தது.

ஆனால், இன்றளவும் இதற்கு நிரந்த தீர்வு காணப்படாத நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

திருப்பதியில் சால்வை ஊழல்

பரகாமணியில் (உண்டியல் பணம் எண்ணுமிடம்) ரவிகுமார் எனும் ஊழியர் ரூ.100 கோடி வரை வெளிநாட்டு கரன்சிகளை திருடி சிக்கிக் கொண்டார். அவரிடம் ஜெகன் ஆட்சியில், தேவஸ்தான அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொண்டு சில சொத்துகளை பறிமுதல் செய்தனர்.

இதிலும் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்ததால், சிஐடி போலீஸார் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்தை கண்காணித்தும் விசாரணை நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு ஊழல் வெளி வந்துள்ளது.

சால்வைகளில் ஊழல்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில், 2 நிறுவனங்கள் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருநாமம், சங்கு, சக்கரம் பொறித்த சால்வைகளை வாங்கி வருகிறது. பட்டு சால்வை தருவதாக கூறி அந்த நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.

பக்தர்களுக்கு சால்வைகள்

ஒரு சால்வையின் விலை ரூ.1,300-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய விஐபிக்கள் சுவாமியை தரிசனம் செய்த பின்னரும், ‘வேத ஆசீர்வச்சனம்’ என அழைக்கப்படும் ரூ.3,000 டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கும், கோயிலில் உள்ள ரங்க நாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள், இந்த சால்வையை போர்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைப்பது வழக்கம்.

பாலியஸ்டர் சால்வைகள்

ஆனால், சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் 2 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டு வந்த சால்வைகள் பட்டுவில் செய்யப்பட்டதல்ல, பாலியஸ்டர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.54 கோடி ஊழல்

இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இதுவரை ரூ.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் முறைகேடு செய்தவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சார்வை குறித்த தீவிர விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in