Gujarat : அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி ! அமைச்சர்கள் பதவியேற்பு!

Ravindra Jadeja Wife Rivaba Jadeja Cabinet Minister : குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட 26 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
Cricketer Ravindra Jadeja Wife Taking Oath As Rivaba Jadeja Cabinet Minister Of Gujarat Latest News in Tamil
Cricketer Ravindra Jadeja Wife Taking Oath As Rivaba Jadeja Cabinet Minister Of Gujarat Latest News in Tamil
1 min read

ராஜினாமா செய்த அமைச்சர்கள் :

Ravindra Jadeja Wife Rivaba Jadeja Cabinet Minister : குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் பூபேந்திர படேல் மந்திரி சபையில் உள்ள அமைச்சர்கள் 16 பேரும் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து, கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றனர்.

அனைவருக்கும் வாய்ப்பு

இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களுக்கும் புதிய மந்திரி சபையில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டது. புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலோடு கவர்னர் ஆச்சார்ய தேவ்விரத்தை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சந்தித்ததை அடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு காந்தி நகரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு

கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்றைய அறிவிப்பின்படி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாலுர், பிரவின்குமுர் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வஹேலா,குன்வர்ஜி பவாலியா, அருண் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வாஹானி, பிரபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்வி மற்றும் கனுபாய் தேசாய் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் விவரம்

பூபேந்திர ரஜினிகாந்த் படேல்

திரிகம் பிஜல் சாங்கா

ஸ்வரூப்ஜி சர்தார்ஜி தாக்கூர்

பிரவின்குமார் மாலி

ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல்

பி.சி. பாரண்டா

தர்ஷனா எம் வஹேலா

கந்தரதலால் சிவலால் அம்ருதியா

குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா

ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜா

ரிவாபா ஜடேஜா

ரிவாபா ஜடேஜா 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்காக ரவீந்திர ஜடேஜாவும் தீவிரமாக் பிரச்சாரம் செய்தார்.

மேலும் படிக்க : குஜராத்தில் 16 அமைச்சர்களும் ராஜினாமா! நாளை பதவியேற்பு விழா!

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் கர்சன்பாய் கர்மூர் 23% வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசின் சத்துர்சின் ஜடேஜா 15.5% வாக்குகளையும் பெற்றனர்.===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in