பக்ரித் பண்டிகை காரணமாக தேர்வு தேதியில் மாற்றம்
பக்ரீத் பண்டிகை காரணமாக நேற்று முதல் நடைபெறுவதாக இருந்த இளநிலை க்யூட் தேர்வு 2026-ஐ தேசிய தேர்வு முகமை மாற்று தேதியில் நடத்துவதாக அறிவித்துள்ளது
மாற்று தேதி அறிவிப்பு
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இளநிலை க்யூட் 2026 தேர்வுகள் நேற்று முதல் நடைபெறுவதாக இருந்தது. பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டதால்,
நேற்று முதல் நடைபெறுவதாக இருந்த இளநிலை க்யூட் தேர்வை மே 31, ஜூன் 6 மற்றும் ஜூன் 7-ம் தேதிகளுக்கு தேசிய தேர்வு முகமை மாற்றி அறிவித்துள்ளது
நுழைவுச்சீட்டு:அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மே 31-ம் தேதி நடைபெறும் க்யூட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை cuet.nta.nic.in என்ற இணையளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
எதிர்வரும் தேர்வுகளுக்கு விரைவில் வெளியாகும் நுழைவுச்சீட்டு
ஜூன் 6 மற்றும் 7-ம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என என்டிஏ தெரிவித்துள்ளது.
===============