MiG21: பிரியாவிடை பெற்ற மிக்-21 போர் விமானம்: 60 ஆண்டுகள் உழைப்பு!

MiG-21 Fighter Jet Farewell Retirement Ceremony : 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் சக தோழனான மிக் 21 ரக போர் விமானம் சண்டீகர் விமான தளத்தில் இருந்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.
MiG-21 Fighter Jet Farewell Retirement Ceremony 60 Years Of Services in IAF
MiG-21 Fighter Jet Farewell Retirement Ceremony 60 Years Of Services in IAF
1 min read

இந்தியாவின் விமானப்படை :

MiG-21 Fighter Jet Farewell Retirement Ceremony : இந்தியாவின் பாதுகாப்பு தூண்களாக விளங்கும் முக்கிய படைகளில் தரைதளம், இராணுவம், கப்பல்படை இவற்றில் ஒன்று தவிர்க்க முடியாதது விமானப்படை ஆகும். அதன்படி அங்கு செயல்படும் வீரர்களில் இருந்து, வானை காக்கும் போர் விமானங்கள் வரை நாட்டை பாதுகாக்கும் பொருட்டு தற்போது வரை மிகத்துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மிக் 21-ன் பிரியாவிடை :

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் விமானத் தளங்கள் உள்ள நிலையில், அங்கு செயல்படுத்தப்படும் போர்விமானங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் திறன் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், அதன் ஆயுட்காலம் முடியும் நிலையில் அவற்றை வழியனுப்புதல் நடந்தே கொண்டே இருக்கும்(MiG-21 Fighter Jet Retirement). அதன்படி, இந்தியாவின் கார்கில் போரில் இருந்து தற்பொழுது நடைபெற்ற சிந்தூர் போர் வரை இந்தியாவிற்கு முக்கிய பங்கு வகித்த போர் விமானங்களில் ஒன்று மிக்21 ரக போர் விமானம் முக்கியமான ஒன்றாகும். ரஷிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கபட்ட இந்த விமானம், 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு 60 ஆண்டுகள் வானில் பறந்ததன் உழைப்பு அளப்பரியது.

பறக்கும் சவப்பெட்டி மிக் 21 :

இந்நிலையில், மிக் 21 ரக போர் விமானம் முதலாவதாக சண்டீகரில் பறக்கவிடப்பட்ட நிலையில், தற்போது 60 ஆண்டுகள் உழைத்து வழியனுப்பி வைக்கபட முடிவு செய்யப்பட்டது. எனவே, தற்போது முதலாவதக பறந்த தளமான சண்டீகர் விமான தளத்திலே இறுதியாக வானில் பறக்கவிடப்பட்டு அதன் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வழியனுப்பதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க : 'Tejas Mk-1A' : 62,000 கோடியில் 97 விமானங்கள் : HAL உடன் ஒப்பந்தம்

வான் படையில் வலிமை மிக்க நாடாக இந்தியா மிளிர முக்கிய காரணியாக மிக் 21 ரக போர் விமானம் இருந்தாலும், ஏராளமான விபத்துகளை சந்தித்ததால் இதனை பறக்கும் சவப்பெட்டி என கூறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in