டெல்லியில் அபாயகரத்தில் காற்று மாசுபாடு : மக்களுக்கு எச்சரிக்கை

Delhi Air Pollution Level Today Update in Tamil : டெல்லியில் தொடர்ந்து காற்ற மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மாசுபாடு அளவு 450 புள்ளிகளாக உயர்ந்து அபாயகர நிலையை எட்டியுள்ளது.
Delhi Air Pollution Level Today Update Air Pollution at Dangerous Conditions Government Warns Read Latest News in Tamil
Delhi Air Pollution Level Today Update Air Pollution at Dangerous Conditions Government Warns Read Latest News in TamilGoogle
1 min read

டெல்லி காற்று மாசுபாடு

Delhi Air Pollution Level Today Update in Tamil : டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு நிலவரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். இதனால் மக்களின் உடல்நலம் கருதி, டெல்லி அரசு அவர்களுக்க சில தடைகளையும் விதிக்கும். அதன்படி, இந்த ஆண்டும் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்து அபயாகர நிலைக்கு சென்றுள்ளது.

காற்று மாசுபாடு அளவீடு

அதாவது, காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது.

151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

அபாயகரத்தை தொட்ட காற்று மாசுபாடு

இந்நிலையில், டெல்லியில் நேற்று நிலவரப்படி காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இதே நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டது.

விளையாடவும் தடை விதிப்பு

பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானத்தில் மாணவ, மாணவியர் விளையாட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், டெல்லி அரசு மக்கள் நலன் கருதி தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை மக்களுக்கு அமல்படுத்தி வருகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொதுவாக காலை வேளையில், உடற்பயிற்சி செய்வோர் முதல் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் வெளியில் செல்லும் நிலையில் உள்ளதால், இதற்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், காற்று மாசுபாட்டை சீராக்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in