

Driving Licence Rules Central Govt Draft Notification
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய பரிந்துரைகள்
ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்கீழ் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு:
ஓட்டுநர் உரிமத்தில் கட்டாய விவரங்கள்
இனி வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்களில் உரிமையாளரின் ரத்த வகை , செல்போன் எண் மற்றும் அவசர காலத் தொடர்பு விவரங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.
வண்ணக் குறியீடுகள்
இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி வண்ணக் குறியீட்டுடன் கூடிய (Color-Coded) ஓட்டுநர் உரிமங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதார் சரிபார்ப்பும் கட்டணத் தள்ளுபடியும்
விண்ணப்பதாரர்கள் இணையவழி ஆதார் சரிபார்ப்பு மூலமாக தங்களது முகவரி, பெயர் மற்றும் தொடர்பு எண் மாற்றங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டால், அதற்கான கட்டணங்களில் தள்ளுபடி வழங்கப்படும்.
கட்டாய சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்கள்
புதிய நடைமுறையின் கீழ் முகவரி, வயது மற்றும் அடையாளச் சான்றுகளுக்காக தனித்தனி ஆவணச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது:
பாஸ்போர்ட், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் அரசுத் துறைகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்.
பாஸ்போர்ட், மின்-ரேஷன் அட்டை, பான் கார்டு மற்றும் அரசு அங்கீகரித்த ஆவணங்கள்.
ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வு கட்டுப்பாடுகள்
பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி இனி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நீடிக்க வேண்டும்.
இணையவழி பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி மதிப்பீட்டுக்கான தேர்ச்சி மதிப்பெண் தற்போதுள்ள 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
விண்ணப்பங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு
பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான இணையவழி விண்ணப்பங்களை, உரிமம் வழங்கும் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கவோ அல்லது தகுந்த காரணங்களைக் குறிப்பிட்டு நிராகரிக்கவோ வேண்டும்.
====================