
EC on Bihar Draft Voter List : பிகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதனிடைய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் உள்ள பிழைகளை சரிசெய்ய உரிமைகோரல்கள் மற்றும் எதிர்ப்புகளை ஆகஸ்ட் 1 முதல் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
ஆனால் , இதுவரை, உரிமைகோரல்கள் மற்றும் எதிர்ப்புகளை பதிவு செய்யும் காலம் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாகியும், எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் ஒரு உரிமைகோரல் அல்லது எதிர்ப்பு சமர்ப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இருப்பினும், இன்று வரை, வாக்காளர்களிடமிருந்து நேரடியாக 7,252 உரிமைகோரல்கள் மற்றும் எதிர்ப்புகள், வரைவு பட்டியல் தொடர்பாக பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்த தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
18 வயது அல்லது அதற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் 43,000 ஆகும். விதிகளின்படி, உரிமைகோரல்கள் 7 நாட்கள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரி அல்லது உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ERO/AERO) ஆல் தீர்க்கப்பட வேண்டும்.
பிகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி இந்த திருத்த செயல்முறை பெரிய அளவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, அவர்கள் பாராளுமன்றத்தில் பிகார் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராக "வாக்கு திருட்டு" என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர், தேர்தல்கள் "முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை" என்று குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க : பிகாரில் பெரும்புயலைக் கிளப்பிய வாக்காளர் பட்டியல் திருத்தம்
கர்நாடகாவில் உள்ள மஹாதேவபுரா சட்டமன்றத்தில் வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸின் ஆய்வை முன்வைத்து, ராகுல் காந்தி 1,00,250 வாக்குகள் "வாக்கு திருட்டு" (வோட் சோரி) என்று குற்றம்சாட்டினார்.