

பிஹாரில் முடிவடைந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
SIR-Gnaneshkumar information in 12 states including Tamil Nadu! பிஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறியவர்களின் பெயர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட SIR பணிகள்
இந்நிலையில் வேறு எந்தெந்த மாநிலங்களுக்க SIR இருக்கும் என்ற கேள்வி உலாவி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வெற்றிகரமாக நடந்தது. இதில் 7.5 கோடி பேர் பங்கேற்றனர். யாரும் மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
எந்தெந்த மாநிலங்களுக்கு SIR
இரண்டாம் கட்டமாக 12மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடக்க உள்ளன. இதில் பிரச்சனை ஏதும் இருந்தால் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் சுதந்திரத்துக்கு பின்பு 9வது முறையாக இப்பணி நடக்கிறது. 1951 முதல் 2004 வரை 8 முறை நடந்துள்ளன. கடைசியாக 2002 முதல் 2004 வரை நடந்தது என்று தெரிவித்தார்.
வாக்களார்கள் சேர்ப்பு
மேலும் பேசிய அவர், பல்வேறு தருணங்களில் வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்நிலையில், பிஹாரில் நடைபெற்ற தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கத்தை தொடர்ந்து, அடுத்த கட்ட வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அனைவரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு நாளை முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் வரும் தேர்தல்களில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று கூறினார்.
இரண்டம் கட்ட திருத்த பணிகளில் வரும் மாநிலங்கள்
மேலும் இரண்டம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உள்ள மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், லட்சத்தீவு, குஜராத், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் அண்டு நிக்கோபர், மேற்கு வங்கம் என்று தெரிவித்துள்ளனர். இந்த திருத்தப்பணிகளில் ஆதார் கார்டு உள்பட 12 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதியற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.