அவசரகாலத்தில் விமானம் தரை இறங்கும் பாதை: முதலில் தடம் பதித்த மோடி

ரூ.100 கோடி மதிப்பீட்டிலான அவசர கால தரையிறங்கும் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .
PM Modi inaugurates Rs 100 crore emergency landing strip
PM Modi inaugurates Rs 100 crore emergency landing stripsource:google
1 min read

PM Modi inaugurates Rs 100 crore emergency landing strip:

பிரதமர் மோடி அசாம் பயணம்

அசாம் மாநிலத்திற்கு ஒருநாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவசர சூழ்நிலைகளில் விமானங்கள் தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்ட ’அவசர கால தரையிறங்கும் சாலையை’ இன்று திறந்து வைத்தார்.

பிரதமருக்கு வரவேற்பு

சபுவா விமான நிலைத்திற்கு வருகை தந்த பிரதமரை மாநில ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

சி-130 விமானத்தில் பிரதமர்

திப்ருகர் மாவட்டம் மோரன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அவசர தரையிறங்கும் பாதையில் பிரதமர் சி-130 விமானத்தில் இறங்கியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அவசர பாதை

சுமார் ரூ.100 கோடி மதிப்பில், 4.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அவசர தரையிறங்கும் பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.

அவசர காலங்களில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பிராந்தியத்தில் முதல்முறை

மேலும் வடகிழக்கு பிராந்தியத்தில் இத்தகைய வசதி இடம் பெருவது இதுவே முதல் முறையாகும்.

100 கோடி மதிப்பில் அவசர கால தரையிறங்கும் சாலையானது, நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் மாற்று ஓடுபாதை

இனிவரும் காலங்களில் அவசர சூழ்நிலைகளின் போது பாதுகாப்புப் படைகள் செல்லவும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கவும் மாற்று ஓடுபாதையாகவும் பயன்படுத்தப்படும்.

முக்கிய ஆதாரமாக இருக்கும்

பாதுகாப்புப் படைகள் இயக்கம், பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்கு இந்த பாதை முக்கிய ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வழி காட்சி

இந்நிகழ்ச்சியின் போது, இந்திய விமானப்படை நடத்திய வான்வழி காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். பின்னர் அவர் குவாஹாட்டி நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in