EPFO : 2025-26 நிதியாண்டிற்கான பிஎப் வட்டி 8.25% ஆக நிர்ணயம் : 3வது ஆண்டாக ஒரே நிலை!

EPF New Interest Rate 2026 : நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறங்காவலர்கள் வாரியம் சிபிடி அறிவித்துள்ளது .
EPFO fixes PF interest rate at 8.25% for financial year 2025-26
EPFO fixes PF interest rate at 8.25% for financial year 2025-26 google
1 min read

வட்டி விகிதத்திதை நிர்ணயிக்கும் இபிஎப்ஓ

EPF New Interest Rate 2025 - 2026 : இந்தியாவில் பணிபுரியும் கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது.

கடந்த 2023- 24ம் ஆண்டுக்கு பிஎப் வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி இருந்தது , இதையடுத்து 2024- 25ம் நிதியாண்டுக்கும் பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடிக்கும் என கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

நிர்ணயம் செய்யப்பட்ட வட்டி விகிதம்

இபிஎப்ஓவின் உயர் முடிவு எடுக்கும் அமைப்பின் இறுதி நிலைப்பாடு இது. இதில் நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது .இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடித்துள்ளது .

சிபிடி-யின் இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு 7 கோடிக்கும் மேற்பட்ட இபிஎப்ஓ சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆண்டு வாரியாக வட்டி விகிதம்

பிஎப் வட்டி விகிதம் ஆண்டு வாரியாக பல மாற்றங்களை கண்டுள்ளது அந்த வகையில் 2018- 19ம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 2019- 20ம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அதே சமயத்தில் 2016- 17ம் ஆண்டில் 8.65 சதவீதமும், 2017- 18ம் ஆண்டில் 8.55 சதவீதமும் வழங்கப்பட்டது. மேலும் 2015- 16ம் ஆண்டில் இந்த விகிதம் 8.8 சதவீதமாக சற்று அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in