

EPFO WhatsApp Service EPF Balance Passbook Download
வாட்ஸ்ஆப் மூலம் பிஎஃப் சேவைகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பில் கணக்கு வைத்துள்ள சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் பண இருப்பு மற்றும் பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ்ஆப் மூலமாகவே அறிந்துகொள்ளும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிஎஃப் கணக்கிலிருந்து கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 5 பணப்பரிமாற்றங்களையும் பயனர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம். இனி பிஎஃப் இருப்பை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்தும் முறை
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர், அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 87964 41800 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
செய்தி அனுப்பிய பிறகு அதில் வரும் விருப்பங்களின்படி மொழியைத் தேர்வு செய்து சேவைகளைப் பெறலாம்.
இதில் பிஎஃப் இருப்பு, கடைசி 5 பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் பதிவிறக்கம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
இருப்புத் தொகையை அறிந்துகொள்ள அனுப்பப்படும் OTP எண்ணைச் சரியாக உள்ளீடு செய்தால், வாட்ஸ்ஆப் மூலமாகவே இருப்பை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளுக்கு எளிமையான விதிகள்
கூடுதல் சிறப்பாக பயன்பாட்டில் இல்லாத EPFO கணக்கில் ரூ.1,000 வரை இருப்பு இருந்தால், அந்தத் தொகையை எடுக்க சந்தாதாரர்கள் எந்தவிதக் கோரிக்கை படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை.
வாடிக்கையாளர்கள் தங்களது தனிநபர் அடையாளத்தையும், வங்கிக் கணக்கு சரிபார்ப்பையும் முடித்துவிட்டாலே நிலுவைத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த எளிய முறை மூலம் பயன்பாட்டில் இல்லாத 1 லட்சம் கணக்குகள் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கணக்குகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.5 கோடி உரிமை கோரப்படாத தொகை இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
===========