Asha Bhosle passes away: 12,000 ஹிட் பாடல்கள், 20 மொழிகள் : காற்றில் கரைந்தார் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே...

வயது மூப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஷ்லே மும்பையில் காலமானார்.
 ​​Famous playback singer Asha Bhosle passes away.
​​Famous playback singer Asha Bhosle passes away. google
2 min read

பிரபல பாடகி ஆஷா போஷ்லே

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, தனது 92வது வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவு காரணமாக ,மும்பையில் காலமானார்.

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது இசைப்பயணம், 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இவர் பெற்ற விருதுகள்

தனது வாழ்நாளில் ஆஷா போஷ்லே இதுவரை இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, நான்கு பி. எஃப். ஜே. ஏ விருதுகள், பதினெட்டு மகாராட்டிர மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

கூடுதலாக கிராமி விருது பெற்ற இவர் 2000 இல், திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருதால் கௌரவிக்கப்பட்டார்.

அதிக பாடல் மற்றும் பத்ம விபூஷண்

2008-இல், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பத்ம விபூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2011-இல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் போசுலேவை இசை வரலாற்றில் அதிகப் பாடல்களைப் பதிவு செய்யப்பட்ட கலைஞராக அங்கீகரித்ததும் குறிபிடத்தக்கது

சர்வதேச அங்கீகாரம்

ஆஷா போஸ்லே இந்திய எல்லைகளைத் தாண்டி சர்வதேச அளவிலும் முத்திரை பதித்துள்ளார்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான Cornershop, ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக "Brimful of Asha" என்ற பாடலை வெளியிட்டது, இது சர்வதேச அளவில் பெரும் ஹிட் அடித்தது.

பிரபல அமெரிக்க கலைஞர் க்ரோனோஸ் குவார்டெட் (Kronos Quartet) உடன் இணைந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையிசையில் ஆஷாவின் பங்கு

தமிழ் ரசிகர்களுக்கும் ஆஷா போஸ்லே மிகவும் நெருக்கமானவர். இளையராஜா இசையில் அவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்களின் மனதில் இருக்கிறது

"செண்பகமே செண்பகமே" (எங்க ஊரு பாட்டுக்காரன்)

"நீ பார்த்த பார்வை" (ஹே ராம்) - கமல்ஹாசனுடன் இணைந்து பாடியது.

"ஓ வெண்ணிலாவே" (ஆனந்த கும்மி) போன்ற பாடல்களை பாடி இன்றும் மக்களின் மனதில் நின்று கொண்டிக்கிறார்

ஆஷா போஸ்லேவின் குரல் காலத்தைக் கடந்தது. தனது 92 வயதிலும் அதே இளமையுடனும், உற்சாகத்துடனும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், தடைகளைத் தகர்த்துத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய ஒரு சாதனைப் பெண்ணாக ஆஷா போஸ்லே திகழ்ந்தார்.

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக இறப்பு

இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

இசைஉலகினர் இரங்கல்

இவரின் இறப்பிற்கு இசை உலகினர் பலரும் அவர்களின் இரங்கலை தெரிவித்தும் , பதிவிட்டு வருகின்றனர் ,

தலைவர்கள் இரங்கல்

மேலும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்து வருகிறார் இவரின் சகோதரி பாடகர் லேத் மங்கேஷ்கர்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in