
பிறப்பு மற்றும் கல்வி:
Jagdeep Dhankhar Resignation : ஜகதீப் தன்கர் 1951 மே 18 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில், இந்து ராஜஸ்தானி ஜாட் குடும்பத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து, செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் ஜகதீப் தன்கர்(Jagdeep Dhankhar Biography) . உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அரசியல் பயணம்:
1989-1991: மக்களவை உறுப்பினராகப் ஜகதீப் தன்கர் பணியாற்றினார்.
1990-1991: சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக ஜகதீப் தன்கர் இருந்தார்.
1993-1998: ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக ஜகதீப் தன்கர் இருந்தார்.
மேற்கு வங்க ஆளுநர் (2019-2022): 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசுடன் பல முறை மோதல்கள் ஏற்பட்டது.
குடியரசுத் துணைத் தலைவர் (2022-2025):
2022 ஆகஸ்டு 6 அன்று நடந்த 14வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகள் பெற்று, மார்கரட் அல்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார் ஜகதீப் தன்கர்.
2022 ஆகஸ்டு 11 அன்று 14வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்றார்.
2025 ஜூலை 21 அன்று, மருத்துவ காரணங்களை முன்வைத்து தனது பதவியை ராஜினாமா செய்தார், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ராஜினாமா : மருத்துவ காரணம் என விளக்கம்
ராஜினாமா மற்றும் சர்ச்சைகள்:
தன்கரின் திடீர் ராஜினாமா(Jagdeep Dhankhar Resignation Reason) உடல்நல காரணங்களால் என்று அறிவிக்கப்பட்டாலும், உறுதியான மருத்துவ அறிக்கைகள் இல்லாததால் அரசியல் நகர்வாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சிலர் அவரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதல்களையும், அவரது பாஜக பின்னணியையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
ஜகதீப் தன்கர் சட்டத்துறை, அரசியல், ஆளுநர் பதவி, மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவி என பல தளங்களில் தனது பயணத்தை மேற்கொண்டவர். அவரது பாதை, ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி, இந்தியாவின் உயரிய பதவிகளில் ஒன்றுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், அவரது ராஜினாமா மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பல விவாதங்கள் நீடிக்கின்றன.