மீண்டும் இலவச கேஸ் சிலிண்டர் விநியோகம் - மத்திய அரசு குட் நியூஸ்!

Ujjwala 3.0: நாடு முழுவதும் சுமார் 10.41 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள நிலையில் மேலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Good News Central Government Announcement on PM Ujjwala Yojana Free Gas cylinder apply online 2026 in Tamil
Good News Central Government Announcement on PM Ujjwala Yojana Free Gas cylinder apply online 2026 in TamilSource : Bharat Gas
1 min read

பட்ஜெட்டில் முன்னுரிமை

PM Ujjwala Yojana Free Gas Scheme 2026 : நடந்து வரும் பட்ஜெட் தொடரில் பல்வேறு பிரிவுகளுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதேபோல், பெண்கள் நலன், சுகாதாரப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் குறிப்பாக முன்னுரிமை அளித்துள்ளது. அதை போல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் ரூ.9,200 கோடியை ஒதுக்கியுள்ளது. இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் எல்பிஜி வசதி கிடைக்க உதவும். நிதி நெருக்கடியால் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியாத குடும்பங்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

இந்த பட்ஜெட்டில், ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்கு பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேரடிப் பலன்

ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.1,500 கோடி நேரடிப் பலன் பரிமாற்றத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம், பயனாளிகள் பெற வேண்டிய நிதி உதவி, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும் என்றும் ,அரசாங்கம் வழங்கும் இந்த உதவியுடன், இணைப்பு பெறுவதற்கு பெண்கள் ஒரு பைசா கூட செலவிட வேண்டியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

விரிவடைந்த பயன்

இதுவரை, நாடு முழுவதும் சுமார் 10.41 கோடி குடும்பங்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாகவும் தற்போது மேலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.

இலவச இணைப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இணைப்பில் சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய், அடுப்பு போன்ற அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பம்.

இத்திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

வீட்டில் தற்போது எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள் உஜ்வாலா யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று உடனடியாக விண்ணப்பித்து கொள்ளலாம் , அதேபோல், இணைய வசதி இல்லாதவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம் .

விண்ணப்பிக்க தேவையான படிவங்கள்

இந்த இலவச Gas சிலிண்டர் பெற விண்ணப்ப படிவத்துடன்(pm ujjwala yojana free gas required documents) ஆதார் அட்டை, முகவரிச் சான்று, ரேஷன் கார்டு ஆகியவை தேவை .ஆதாரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சேவை உங்களை உடனடியாக வந்து சேரும் .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in