போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகள்: CJP கட்சி மத்திய அரசிடம் முன் வைப்பு;போராட்டம் முடிவுக்கு வருமா?.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிஜேபி கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்
Three demands to call off the protest: CJP party places them before the Central Government
Three demands to call off the protest: CJP party places them before the Central Governmentgoogle
1 min read

நீட் தேர்வு முறைக்கேடு, சிஜேபி கட்சியினரின் போராட்டம்

டெல்லி ஜந்தன் மந்தாரில் நீட் முறைகேடு தொடர்பாக ,மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்

முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்த சிஜேபி

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது நடைபெற்ற நிலையில் , நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாக சென்றனர் ,இந்த நிலையில் டெல்லி ஜந்தன் மந்தரில் பதற்றமான சூழலும் , காவல் துறை தடியடி நடத்தியும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் சிஜேபு கட்சியனரை தடுத்திருந்தனர்

போரட்டத்தை கைவிட வேண்டும் என்றால் , கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல்

சிஜேபி கட்சியின் மூன்று முக்கிய கோரிக்கைகள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் மற்றும்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கையை சிஜேபி கட்சி மத்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளது

தொடர் உண்ணாவிரத போராட்டம் , ஆதரவாக வாங்சுக்

தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக ஜந்தன் மந்தரில் தொடர் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் , இவர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுங்க் ஆதரவாக் 2 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டு ஆதரவு அளித்தார்.

வழுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சோனம் வாங்சுக்

20 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதால சோனம் வாங்சுக்கின் உடல் எடையாந்து 8 கிலோ வரை குறைந்து உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ,

நீதிமன்ற உத்தரவின் ப்பெரில் போரட்டத்தில் இருந்து அவர் வழுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவம்னையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார் , அவரின் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

டெல்லியில் பூதகரமாக வெடித்துள்ள சிஜேபி போராட்டம்

இந்த நிலையில் டெல்லியில் சிஜேபி கட்சியினரின் போராட்டம் பூதகரமாக வெடித்துள்ளது , இந்த் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

====================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in