

சமீபத்தில் Flydubai விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில் காயமடைந்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஸ்மித் மச்சாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
அபுதாபியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது அவரது உடல்நிலை, சிகிச்சை முன்னேற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த பிரதமர், விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவ நேரத்தில் அவர் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை பிரதமர் பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு Flydubai விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது காக்பிட்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது.
இதில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் காயமடைந்தார்.
எனினும், கடுமையான சூழ்நிலையிலும் அமைதியை இழக்காமல் செயல்பட்ட அவர், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
ஸ்மித் மச்சாருடன் பேசியதற்கு முன்பு, அவரது மனைவி மற்றும் பெற்றோருடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
அப்போது இந்திய அரசு மற்றும் இந்திய தூதரகங்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகின.
சம்பவத்துக்குப் பிறகு முதலில் சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்ற ஸ்மித் மச்சார், பின்னர் மேல்சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
===================